கூடலூர் அருகே உள்ள குறுவனத்துப்பாலத்தில் நின்று அழுதுகொண்டு இருந்த இளம்பெண் ஒருவர் முல்லைப்பெரியாற்றில் குதிக்க முயன்றார். அவரை அப்பகுதி மக்கள் ஓடிவந்து பிடித்தனர். விசாரணையில் இவர் கம்பம் அருகே உள்ள அணைப்பட்டியைச் சேர்ந்த பிரியங்கா (20) என தெரியவந்தது. மேலும், வேறு சமுதாயத்தைச் சேர்ந்த பூவரசன் (25) என்பவரை காதலித்து 7 மாதத்திற்கு முன் திருமணம் செய்ததாகவும், தான் தற்போது கர்ப்பமாக இருப்பதாகவும், கடந்த 10 நாட்களாக தனது கணவரை காணவில்லை எனவும் பிரியங்கா கண்ணீருடன் தெரிவித்தார்.
இதனால் மனமுடைந்து ஆற்றில் குதிக்க முயன்றன் என்றார். உடனடியாக அப்பகுதி மக்கள் கர்ப்பிணி பெண் பிரியங்காவை பொலிசாரிடம் ஒப்படைத்தனர். சம்பவம் தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து பூவரசனை தேடி வருகின்றனர்.
