தென்னிந்திய சினிமாவில் சுமார் 17 ஆண்டுகளுக்கு மேல் முன்னணி கதாநாயகியாக இருந்து அனைவரையும் மிரள வைத்தவர் தான் நடிகை மாதவி,அன்றைய முன்னணி நட்சத்திரங்களான ரஜினி, கமல் ஆகியோருடன் பலமுறை கதாநாயகியாக நடித்திருந்தார் ,.
சினிமாவில் நடித்த 17 ஆண்டுகளில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஒரியா என அனைத்து மொழிகளிலும் முன்னணி நாயகியாக கொடி நாட்டியவர். அதுமட்டுமில்லாமல் கிட்டதட்ட 300 படங்களுக்கு மேல் நடித்து அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளார் ,

இந்நிலையில் கடந்த 1996 ஆம் ஆண்டு அவருடைய ஆன்மீக குருவின் ஆலோசனைப்படி அமெரிக்க தொழிலதிபர் சர்மா என்பவரை திருமணம் செய்து கொண்ட மாதவி, அமெரிக்காவிலே செட்டில் ஆகிவிட்டார்.மேலும் மாதவி – சர்மா தம்பதிகளுக்கு மூன்று மகள்கள் உள்ள நிலையில் சமூக வலைதளங்களில் அவர்களின் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.,
