தாயை கொலை செய்தது ஏன்? 19 வயது மகளின் அதிரவைக்கும் வாக்குமூலம்

காதலை கைவிடுமாறு தாய் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததால், காதலனுடன் சேரமுடியாது என்ற பயத்தில் அவரை கொலை செய்ததாக கல்லூரி மாணவி வாக்குமூலம் அளித்துள்ளார். திருவள்ளூரை அடுத்த காக்களூரை சேர்ந்தவர் திருமுருகன். இவருடைய மனைவி பானுமதி (50). இவர்களது 2-வது மகள் தேவிபிரியா (19). பட்டாபிராம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். தேவி பிரியாவுக்கும் ஆந்திர மாநிலம் தடா பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவருக்கும் கடந்த 6 மாதத்துக்கு முன்பு பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் தங்களது செல்போன் எண்களை பரிமாறிக்கொண்டு பேசிக் கொண்டு பேசி வந்துள்ளனர். இதனால் இவர்களின் நட்பு நாளைடைவில் காதலாக மாறியது. சுரேஷ் செங்குன்றம் அருகே உள்ள தனியார் கம்பெனியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

வேலைக்காக தினமும் சென்னைக்கு வந்தபோது மின்சார ரெயிலில் தேவி பிரியாவை அடிக்கடி சந்தித்து வந்துள்ளார். இந்த காதல் விவகாரம் தேவி பிரியாவின் தாய் பானுமதிக்கு தெரியவந்ததும் அவர தெரியவர காதலை கைவிடும்படி மகளை வற்புறுத்தி வந்தார். ஆனால் தேவி பிரியா கண்டுகொள்ளவில்லை. தேவிபிரியாவுக்கும் சுரேசுக்கும் பேஸ்புக் மூலம் தஞ்சாவூரைச் சேர்ந்த அஜித்குமார், கும்பகோணத்தைச் சேர்ந்த விக்னேஷ் உள்ளிட்ட ஏராளமானோர் நண்பர்களாக இருந்தனர். அவர்கள் தங்களது காதலுக்கு உதவுமாறு விக்னேஷ், அஜித்குமாரிடம் கேட்டு இருந்தனர். மேலும் தாய் பானுமதியை கொலை செய்துவிட்டு வீட்டை விட்டு வெளியேற தேவிபிரியா திட்டமிட்டு இருந்தார்.

இதற்காக கடந்த 15-ஆம் திகதி தேவிபிரியாவும், காதலன் சுரேசும் முன் கூட்டியே திட்டமிட்டனர். தடா பகுதியில் இருவரும் சந்தித்து பேசி தங்களது திட்டத்தை வகுத்தனர். அதன்படி நேற்று மாலை தேவிபிரியா பேஸ்புக் மூலம் நண்பர்களாக பழகிய அஜித்குமார், விக்னேஷ் ஆகியோரை வீட்டுக்கு வரவழைத்தார். அப்போது ஏற்பட்ட தகராறில் ஆத்திரம் அடைந்த தேவிபிரியாவும், நண்பர்கள் அஜித்குமார், விக்னேஷ் ஆகிய 3 பேரும் சேர்ந்து பானுமதியை கத்தியால் குத்தி கொலை செய்தனர். இதையடுத்து அங்கிருந்து தப்பி ஓட முயன்ற அஜித்குமார், விக்னேசை அப்பகுதி மக்கள் சுற்றி வளைத்து பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.

இதையடுத்து 3 பேரையும் கைது செய்த பொலிஸ் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளது. அப்போது தாய் பானுமதியை கொலை செய்தது ஏன் என்பது குறித்து தேவி பிரியா வாக்குமூலம் அளித்துள்ளார். அதில், கல்லூரிக்கு மின்சார ரெயிலில் செல்லும்போது சுரேசுடன் காதல் ஏற்பட்டது. நாங்கள் இருவரும் உயிருக்கு உயிராக காதலித்த் வந்தோம். ஆனால் இதனை அறிந்த தாய் பானுமதி எங்களது காதலை கைவிடுமாறு தொடர்ந்து கூறி வந்தார்.

அவர் உயிரோடு இருந்தால், காதலனுடன் சேர முடியாது என்று நினைத்தேன். இதனால் இது பற்றி சுரேஷிடம் பேசினேன். இதற்கிடையில் எங்களுக்கு பேஸ்புக் மூலம் தஞ்சாவூரை சேர்ந்த அஜித்குமார், கும்பகோணத்தை சேர்ந்த விக்னேஷ் ஆகியோர் எங்களுக்கு அறிமுகம் ஆனார்கள். அவர்களிடம் எங்களது காதல் நிலைமை குறித்து தெரிவித்த போது அவர்கள் காதலுக்கு உதவுவதாக கூறினார்கள்.

இதுபற்றி காதலன் சுரேசிடம் கூறி நாங்கள் 4 பேரும் தாய் பானுமதியை தீர்த்துக்கட்டி விடலாம் என்று முடிவு செய்தோம். இதற்காக பேஸ்புக் நண்பர்களான அஜித்குமார், விக்னேஷ் மூலம் வீட்டில் கொள்ளை நாடகம் நடத்தி தாய் பானுமதியை கொலை செய்ய திட்டமிட்டோம், அதன் படியே எல்லாம், நடந்தது.

இறுதியை தாயை கத்தியால் குத்தி கொலை செய்த அவர்கள், வெளியில் ஓடும் போது கையில் இரததக் கறையுடன் இருந்ததால், அக்கம் பக்கத்தினர் மடக்கி பிடித்துவிட்டனர். இதனால் நானும் சிக்கிக் கொண்டேன். எங்கள் 3 பேரையும் பொலிசார் கைது செய்துவிட்டனர் என்று கூறியுள்ளார்.