திருமணத்திற்கு போக முடியாது..!! இழுத்தடிக்கும் அதிகாரிகள்..! போலீஸ்காரருக்கே இந்த நிலைமையா..?

சென்னை, கொளத்தூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார் ஏ. சந்திரசேகரன். சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறையில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி கடந்த ஜூன் மாதம் ஓய்வுபெற்றார். பணியில் இருக்கும்போதே தன் மகள் கல்யாணத்தை நடத்திட முயற்சி செய்தார். 

அதற்கான தருணம் இப்போது தான் வந்தது. மகள் காயத்திரி- முத்துமணி திருமணம் விருதுநகர் மாவட்டம், ஆவுடையார் புரத்தில் உள்ள வ. வு. சி. மனமகிழ் மன்றத்தில் வருகிற 24. 6. 2020 அன்று நடைபெறுகிறது. அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சந்திரசேகரன் செய்து முடித்தார். தன் மனைவி, மகள் (மணமகள் காயத்திரி) உட்பட 7 பேருடன் விருதுநகர் மாவட்டத்திற்கு செல்வதற்கு இ பாஸ் கேட்டு விண்ணப்பித்தார். திருமணத்திற்கு இ-பாஸ் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், 

அவருடைய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இதனால் அவர் அ திர்ச்சி அடைந்தார். அவருடைய குடும்பமே மன உளைச்சலில் உள்ளது. இதனால் தங்களுக்கு உதவும்படி காவல் ஆணையாளர் ஏகே விஸ்வநாதனிடம் அக் காவலர் குடும்பம் முறையீடு செய்துள்ளது.