சமீப காலமாக சினிமா துறையில் உள்ள பிரபலங்கள் புது புது வேலைகளை செய்து வருகின்றனர். நம்மளை ஆச்சர்ய படும் வகையில் அவைகள் உள்ளன..
மேலும் சினிமா துறையில் பல்வேறு மாற்றங்கள் உருவாகியுள்ளன. இந்நிலையில் படங்கள் தயாராவதை விட அந்த படத்தை மக்களிடம் அதிகம் கொண்டு போய் சேர்க்க தான் படக்குழு அதிகம் போராடுகிறார்கள்.

அப்படி தங்களது படத்தை புரொமோட் செய்ய பலரும் வித்தியாசமாக யோசிக்கிறார்கள். தெலுங்கில் நாளை சாய் தேஜா, ராஷி கண்ணா நடிப்பில் Prati Roju Pandaage என்ற படம் வெளியாக இருக்கிறது.இந்த படத்தை மாருதி தாசரி இயக்குகிறார்.இந்த படத்திற்கு தமன் தான் இசை அமைக்கிறார். வரும் 20 ஆம் தேதி இந்த படம் திரைக்கு வர உள்ளது.

இப்பட புரொமோஷனுக்காக படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள நடிகை ராஷி கண்ணா ஹைதராபாத்தில் உள்ள பிரபல திரையரங்கில் டிக்கெட் விற்றுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்து டிக்கெட்டும் அவரிடம் வாங்கியுள்ளனர்.
ஒரு திரைப்படத்தை ப்ரோமோஷன் செய்ய இப்படியெல்லாம் கூட காலத்தில் இறங்கி விட்டார்கள் போலும்.