A .L . விஜய் இயக்கத்தில் விக்ரமின் அருமையான நடிப்பில் வெளியான திரைப்படம் தான் “தெய்வமகள்” இந்த படம் பெரிய ஹிட் ஆக காரணம் பேபி சாரா தான். விக்ரமின் ஆறு வயது மகளாக நடித்து மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றார் சாரா.

அந்த படத்தில் பேபி சாரா – விக்ரம் வரும் காட்சிகள் மிக உருக்கமாக இருக்கும் அந்த அளவுக்கு இருவரும் நடித்து இருப்பார்கள். இந்த படம் பேபி சாராக்கு ஒரு நல்ல பெயரை பெற்று கொடுத்தது. அதன் பின் சில ஹிந்தி படங்களில் நடித்து வந்தார். சற்று இடைவேளை விட்டு மறுபடியும் தமிழில் நடித்தார்.

A .L . விஜய் இயக்கத்தில் “சைவம்” என்ற படத்தில் நடித்து இருந்தார் அதுவும் மக்களிடம் சாராக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது. தற்பொழுது சாரா புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு உள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் சாராவா இது ஆளே மாறிட்டாரே என்று ஆச்சர்யப்பட்டு வருகின்றனர்.