நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் வெளியாகி சக்கபோடு போட்டு திரைப்படம் தான் ‘தேவர் மகன்’ என்ற திரைப்படம். இந்த படம் மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்ற ஒரு படமாக அமைந்தது என்று தான் சொல்ல வேண்டும். இன்று வரை இந்த படம் மக்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளது என்று கூட சொல்லலாம்.

இதில் கமலுடன் இணைந்து நடிகை கௌதமி, நடிகை ரேவதி, மற்றும் நடிகர் தலைவாசல் விஜய், காமெடி நடிகர் வடிவேலு, சங்கிலி முருகன் என பலரும் நடித்திருந்தனர். இந்நிலையில் நடிகை ரேவதி நடித்திருந்த கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடித்து வந்தது நடிகை மீனா என தெரியவந்துள்ளது.

ஆம் தேவர் மகன் படத்தில் நடிகை ரேவதியின் கதாபாத்திரத்தில் முதல் மூன்று நாட்கள் நடிகை மீனா நடித்து வந்தாராம். மேலும் அதன்பின் நடிகை மீனா அந்த கதாபாத்திரத்துக்கு செட் ஆகாத காரணத்தினால், இப்படத்திலிருந்து வெளியேறினாராம் நடிகை மீனா.
