பிக்பாஸ் வீட்டில் யாரும் எதிர்பார்க்காத வகையில் நேற்று முன் தினம் சரவணன் வெளியேற்றப்பட்டார். இதனால் போட்டியாளர்கள் மட்டுமின்றி ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியடைந்தனர். அதுமட்டுமின்றி கவீன் மற்றும் சாண்டி சரவணன் வெளியே சென்றதை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில் பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்ட பரணி, சரவணனை போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது, போனில் பேசும் போது தனக்கு கெட்ட பெயர் வந்துவிட்டதாக கூறி அழுதுவிட்டாராம்.
இதில் வரும் பணத்தை வைத்து புது வாழ்க்கை துவங்கலாம் என இருந்தேன். இப்படி நடக்கும் என தெரிந்திருந்தால் நான் பிக்பாஸ் சென்றிருக்கவே மாட்டேன் என கூறி அழுதார் என்று பரணி கூறியுள்ளார்.
