நடிகர் விஜய்க்காக லண்டனிலிருந்து வந்த ஈழத்து பெண் சங்கீதா !! யாரும் அறிந்திராத சுவாரசிய காதல் கதை !!

கோலிவுட்டின் நட்சத்திர தம்பதிகளான நடிகர் விஜய்- சங்கீதா அவர்கள் வெற்றிகரமாக 20 ஆண்டுகால திருமண வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.இவர்களுக்கு சஞ்சய் என்ற மகனும், சாஷா என்ற மகளும் இருக்கின்றனர். தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த காலத்தின் தன்னுடைய ரசிகையான சங்கீதாவை மணமுடித்தார் நடிகர் விஜய், இவர்களது திருமணம் ஆகஸ்ட் 25ம் திகதி 1999ம் ஆண்டு நடந்தது.

இயக்குனரின் மகனாக இருந்தாலும் ஆரம்ப காலகட்டங்களில் தொடர் தோல்விகளை சந்தித்து வந்த நடிகர் விஜயின் திரையுலகில்திருப்பு முனையாய் அமைந்த படம் பூவே உனக்காக. இப்படத்திற்கு பின்பு விஜய்க்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்தது, குறிப்பாக பெண் ரசிகர்கள். இவர்களில் ஒருவர் தான் சங்கீதா, இலங்கையை பூர்வீகமாக கொண்ட சங்கீதா குடும்பத்துடன் லண்டனில் வசிந்து வந்தார்.நடிகர் விஜயை பார்க்கவேண்டும் என்பதற்காக லண்டனில் இருந்து புறப்பட்டு வந்த சங்கீதா, பிலிட் சிட்டியில் பட ஷீட்டிங்கில் இருந்த போது விஜயை சந்தித்துள்ளார். தனக்காக கஷ்டப்பட்டு சங்கீதா வந்ததை தெரிந்து கொண்ட விஜய் வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார்.

சங்கீதாவும் விஜய்யின் வீட்டிற்கு சென்று அவரது பெற்றோரை சந்தித்து பேசியுள்ளார். இந்த முறை சங்கீதா வந்த போது, விஜய்க்கு இவர் தான் சரியான ஜோடி என்பதை அறிந்து கொண்ட எஸ்.ஏ.சந்திரசேகர் நேரடியாக சங்கீதாவிடமே திருமணத்திற்கு சம்மதமா என கேட்டார். ஏற்கனவே விஜய்யின் ரசிகையான சங்கீதா ஓகே சொல்ல, லண்டன் சென்ற விஜய்யின் பெற்றோர் சங்கீதாவின் பெற்றோரிடம் சம்மதம் கேட்டுள்ளார்.இரு வீட்டார் சம்மதத்துடன் 1999ம் ஆண்டு ஆகஸ்ட் 25ம் திகதி திருமணம் நடந்தது. தொடர்ந்து 2000ம் ஆண்டு சஞ்சய் என்ற மகனும்,

2005ம் ஆண்டு திவ்யா சாஷா என்ற மகளும் பிறந்தனர்..இந்த ஆண்டுடன்20 ஆண்டுகால திருமண வாழ்க்கையை வெற்றிகரமாக வாழ்ந்து வரும் இந்த ஜோடி இளைய தலைமுறை விஜய் ரசிகர்கள் பலருக்கும் ஓர் எடுத்துக்காட்டே!