நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்தில் பிக் பாஸ் மீரா மிதுன் நடித்துள்ளார் தெரியுமா ?? எந்த காட்சியில் நடித்திருக்கார்ன்னு நீங்களே பாருங்க !!

பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ச்சியாக பார்த்துக்கொண்டிருக்கும் அனைவர்க்கும் மீரா மிதுன் பரிச்சியமான முகமாக இருக்கும்.பலவிதமான சர்ச்சைகள் வீட்டிற்குள்ளும் வீட்டை விட்டு வெளிவந்த வண்ணம் இருந்தது.பிக் பாஸ் வீட்டிற்கு செல்வதற்கு முன்னரே இவர் மீது பல சர்ச்சைகள் இருந்தன. சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த வாரம் வெளியாகிய “நம்ம வீட்டு பிள்ளை” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பை பெற்று வருகிறது. நம்ம வீட்டு பிள்ளை படத்தை காண திரையரங்கினுள் குடும்பம் குடும்பமாக கூட்டம் அலை மோதுகிறது.

சிவகார்த்திகேயனுக்கு இந்த படம் சூப்பர் ஹிட் வரிசையில் இணைந்துள்ளது. கண்டிப்பாக நல்ல வசூல் கொடுக்கும் படம் என்பது உறுதியாகியுள்ளது. நம்ம வீட்டு பிள்ளை படத்தில் பிக்பாஸ் பிரபலமான மீரா மிதுன் நடித்துள்ளதாக செய்திகள் வெளியானது. மீரா மிதுன் கூட அவர் நடிப்பதாகவும் படத்தில் என்னை காணலாம் என்றுகூட குறிப்பிட்டிருந்தார். ஆனால் எதிர்பாராத விதமாக மீரா மிதுனின் காட்சிகள் படத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது.

இதனால் ரசிகர்கள் மீரா மிதுனை கலாய்த்து வருகின்றனர். உண்மையில் மீரா மிதுன் நம்ம வீட்டு பிள்ளை படத்தில் நடித்துள்ளார். ஆனால் என்னவோ அது சில விஷயங்களால் படத்திலிருந்து காட்சிகள் நீக்கப்பட்டுள்ளது.

இதோ மீரா மிதுன் நடித்துள்ள அந்த படப்பிடிப்பு காட்சிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.புகைப்படங்களை வைத்து பார்க்கையில் எதோ ஒரு நடனக்காட்சியில் நடித்திருக்கலாம் எனத்தெரிகிறது.