நித்தியானந்தா சொத்துக்களின் வாரிசு ரஞ்சிதா இல்லை! இந்த பெண் தான்… பிரிட்டனுக்கு எடுத்து சென்ற பணம் எவ்வளவு தெரியுமா?

சாமியார் நித்தியானந்தாவின் தாய் உயிரோடு இருப்பது தெரியவந்துள்ள நிலையில் ரஞ்சிதாவை தனது சொத்துகளுக்கான வாரிசு என அவர் அறிவிக்காமல் தனது தாயை அறிவித்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பி சென்றது தெரியவந்துள்ளது. நித்தியானந்தாவின் அப்பா ஏற்கனவே இறந்துபோய்விட்டார். அம்மா இருக்கிறார். அவர் பெயர் லோகநாயகி. சமீபத்தில் வெளிநாட்டுக்குப் போலி பாஸ்போர்ட்டுடன் நித்தியானந்தா தப்பிச் செல்லும்போது பிடதி ஆசிரமத்தை நிர்வகிக்கும் பொறுப்பை வயதான லோகநாயகி அம்மாவிடம் கொடுத்துவிட்டுத்தான் சென்றார். அத்துடன் பிடதி ஆசிரம செலவுகளுக்காக 20 கோடி ரூபாயை வங்கியில் போட்டிருக்கிறார்.

இந்தமுறை அவர் நேபாளம் வழியாக வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லும் போது எல்லோரும் எதிர்பார்த்த மாதிரி ரஞ்சிதாவை தனது சொத்துகளுக்கான வாரிசு என அறிவிக்கவில்லை. தனது அன்னையான லோகநாயகியைத்தான் தனது சொத்துகளுக்கான வாரிசாக நித்தியானந்தா நியமித்தார். லாப நோக்கில் செயல்படாமல் ஆன்மிக நோக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்ட அறக்கட்டளையை அப்படியே குடும்பச் சொத்தாக மாற்றினார் நித்தியானந்தா. அமெரிக்க டிரஸ்ட்டுகள் பெயருக்கு இந்தியாவில் உள்ள அக்கவுண்ட்களில் பணத்தை மாற்றினார். இப்படி அவர் வெளிநாடுகளுக்கு கொண்டு போன பணம் மட்டும் நாலாயிரம் கோடி ரூபாய்.

பிரித்தானியாவுக்கு கொண்டு போன நாலாயிரம் கோடியில் தான் பசிபிக் கடல் பகுதியில் நித்தி தீவு வாங்கினார். அதற்கு “கைலாசா’ என பெயரிட்ட பிறகு நித்தியானந்தாவுக்கு காலம் கெட்டது.ரஞ்சிதாவிற்கு ஒருசில கோடிகள் மட்டும் தந்திருக்கிறார். அதுதான் அவர் வாழ்க்கையில் செலவு செய்த அதிகபட்ச நன்கொடை. கைது நடவடிக்கைகள், புகார்கள், வழக்குகள் என வந்தபிறகு இந்தியாவில் பினாமி பெயர்களில் இருந்த சொத்துகளை நித்தியானந்தா விற்று வருகிறார்.

அவரது அம்மா லோகநாயகியைப் பயன்படுத்தி, நித்தியின் பெயரில் உள்ள டிரெஸ்ட்டுகளின் சொத்துக்களை விற்றுவருவதுதான் அவரது லேட்டஸ்ட் மூட்டை கட்டும் நடவடிக்கைகள் என்கிறார்கள் அவரது சீடர்கள். நித்தியாந்தா இருக்குமிடத்தை சொல்ல வேண்டும் என கர்நாடக உயர்நீதிமன்றம் சொன்ன வழக்கு எதிர்பார்த்தபடி 18-ஆம் திகதி நீதிமன்றத்திற்கு வரவில்லை. அதனால் நித்தியாந்தாவை தேடப்படும் குற்றவாளி என கர்நாடக பொலிசாரின் புலனாய்வுப் பிரிவு அறிவிக்கிறது.