பிரபல நடிகை விஜயலட்சுமி சமீப மாதங்களாக சீமான் மீது facebook லைவ்வில் மிகக் க டுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து அவர் பேசிவந்தார் என்பதை நாம் அறிவோம். நேற்று அவருடைய facebook பக்கத்தில் பதிவிட்ட வீடியோவில், நான், எனது அம்மாவுக்கும் அக்காவுக்காவும் தான் தற்போது உயிர் வாழ வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், தற்போது அந்த எண்ணம் இல்லை. என்னை, ஹரி நாடார் நா க்கை அ றுத்து விடுவேன் என்று கூறி மோசமாக பேசினார்.

மேலும், என்னுடைய சாதி குறித்தும் பேசினார் என்று கூறியிருந்தார் நடிகை விஜயலட்சுமி. இந்நிலையில் தான், அதிகளவில் மாத்திரைகளை உட்கொண்டு அவர் த ற்கொ லைக்கு முயன்றதாக தகவல்கள் வெளியாகின. பின்னர் விஜயலட்சுமி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் தற்போது அவரது உடல்நிலை ஆ பத் தான கட்டத்தில் இல்லை என்று மருத்துவர்கள் கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விஷயம் தான் சமூக வலைதளங்களில் தற்போது தீயாக பரவிய நிலையில், இது தொடர்பாக பொலிசார் விசாரணை மேற்கொண்டனர் என்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நடிகை விஜயலட்சுமியிடம் மாஜிஸ்திரேட் விசாரணை நடந்து வருகிறது.
விரைவு நீதிமன்ற மாஜிஸ்திரேட் வெங்கடேசன் அவர்கள், மருத்துவமனையில் விஜயலட்சுமியிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றுள்ளார். மாஜிஸ்திரேட் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கையை காவல்துறை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
