பிக்பாஸ் வீட்டில் நிகழ்ந்த 3 மணி நேர விசாரணை…. வனிதா எடுத்த அதிரடி முடிவு!

நடிகை வனிதா விஜய் குமார் சமீபத்தில் தனது மகள் ஜெனிதாவைப் பார்க்க ஹைதராபாத்துக்குச் சென்றுள்ளார். அப்போது, மகளை யாருக்கும் தெரியாமல் அழைத்துவந்துள்ளார். இதையடுத்து வனிதா மீது காவல்துறையிடம் புகார் அளித்தார் ஆனந்த்ராஜ். வனிதா விஜய்குமாருக்கு நிரந்தர முகவரி இல்லாததால் அவரைத் தேடுவதில் சிரமம் எற்பட்டதாக ஆனந்த்ராஜ் தெரிவித்துள்ளார். வனிதா, தற்போது பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார். இந்நிலையில் வனிதா விஜய்குமாரையும் அவருடைய மகளையும் தேடிவந்த தெலுங்கானா காவல்துறை தமிழகக் காவல்துறையினர் உதவியை நாடியுள்ளது.

நசரத்பேட்டை காவல்துறை உதவியுடன் தெலுங்கானா காவலர்கள், வனிதா விஜய்குமாரிடம் விசாரணை நடத்த பூந்தமல்லியில் அமைந்துள்ள பிக்பாஸ் அரங்கத்துக்குள் சென்றுள்ளனர். சுமார் 3 மணி நேர விசாரணைக்கு பிறகு பொலிசாருக்கு வனிதா ஒரு வாக்குறுதியை அளித்துள்ளார். அதாவது, மாலை 5 மணிக்கு பிறகு தனது பாதுகாப்பில் உள்ள மகள் ஜெனிதாவை அழைத்து வர வனிதா விஜயக்குமார் சம்மதம் தெரிவித்துள்ளார்.

இதனைத்தெடர்ந்து மகளிடம், அப்பாவுடன் செல்ல விருப்பமா அல்லது அம்மாவுடன் செல்ல விருப்பமா என கேட்க பொலிசார் முடிவு செய்துள்ளனர். குழந்தையின் விருப்பத்தை பொறுத்து அப்பாவிடமோ அல்லது அம்மாவிடமோ

ஒப்படைக்கப்படும் என பொலிசார் முடிவு செய்துள்ளனர். இதனால் 5 மணிக்கு பிறகே வனிதா விவகாரத்தில் முடிவு தெரியவரும். பிக்பாஸ் வீட்டிற்குள் பொலிஸ் சென்றுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.