தமிழகத்தில் விவகாரத்து வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜரான பிரபல நடிகை அதிதி கவுன்சிலிங்கில் கலந்து கொள்ள இயலாது என்று கூறியதால், நீதிபதி கோபமடைந்து குறித்த நடிகையை கண்டித்துள்ளார். அபி சரவணன் தாக்கல் செய்திருந்த விவாகரத்து வழக்கில் மதுரை குடும்ப நல நீதிமன்றத்தில் ஆஜராகாமல் வாய்தா வாங்கிவந்த அதிதி மேனனை இன்று கண்டிப்பாக ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மதுரையைச் சேர்ந்தவர் நடிகர் அபி சரவணன். இவர் பிரபல நடிகையான அதிதி தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டு மலையாளப் படங்களில் நடித்து வருதாக புகார் கூறியிருந்தார்.

இதனால் இது குறித்து அதிதி கூறுகையில், நான் காதலித்தது உண்மை, ஆனால் அபி சரவணனின் உண்மை முகத்தை அறிந்து அவரிடமிருந்து விலகிவிட்டேன். ஜல்லிக்கட்டு, விவசாயிகள் போராட்டம் நடந்தசமயத்தில் அபிசரவணன் நிதிதிரட்டினார். அந்தப்பணத்தை அவர் மோசடி செய்தார். இந்தத் தகவல் எனக்கு தெரிந்ததும் அவரைத் தட்டிக் கேட்டேன், மோசடியில் ஈடுபடும் அவருடன் நான் இருந்தால் என் மீதும் குற்றம் சாட்டப்படும், அதுமட்டுமின்றி அபி சரவணன் நடித்த முதல் படத்தின் நடிகையை ஏமாற்றியுள்ளார். இப்படி அவரைப் பற்றி பல உண்மைகள் தெரியவந்ததால், அவரை விட்டு பிரிந்தேன்,

ஆனால் அவரோ நான் திரையுலகில் வளர்ந்துவிடக்கூடாது என்பதற்காக சில தகவல்களை கூறி வருகிறார். இது என்னை மட்டுமின்றி என்னை சுற்றியுள்ளவர்களையும் பாதிப்பதால், அவர் என் மீது புகார் கொடுத்த போதும் அமைதியாக இருந்தேன். ஆனால் அவர் காரில் கடத்தப்பட்ட சமப்வத்திற்கு நான் தான் காரணம் என்று கூறப்பட்டதால், அது குறித்து புகார் கொடுத்தேன் என்று கூறியிருந்தார். இந்நிலையில், அபி சரவணன் தாக்கல் செய்திருந்த விவாகரத்து வழக்கில் மதுரை குடும்ப நல நீதிமன்றத்தில்

ஆஜராகாமல் வாய்தா வாங்கிவந்த அதிதி மேனனை, இன்று நீதிமன்றத்தில், கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன் படி இன்று வழக்கு விசாரணைக்கு அபிசரவணன் மற்றும் அதிதி மேனன் ஆஜராகினர். அப்போது நீதிபதியை சந்தித்த நடிகை அதிமேனன் தரப்பு,
இந்த வழக்கு தொடர்பாக கவுன்சிலிங்கில் கலந்து கொள்ள முடியாது, இதை நாங்கள் உயர்நீதிமன்றத்தில் கொள்வதாக கூறினார். இதனால் கோபமடைந்த நீதிபதி, நடிகையை கண்டித்ததுடன், இது குடும்ப நல நீதிமன்றம், கண்டிப்பாக கவுன்சிலிங்கில் கலந்து கொள்ள வேண்டும் என்று அதிரடியாக உத்தரவிட்டார்.
