பெற்ற மகளின் திருமணத்திற்கு போகாத பிரபல நகைச்சுவை நடிகர்.. காரணத்தை கேட்டா ஷாக் ஆயிடுவிங்க!!

மலையாள திரையுலகின் கவுண்டமணி என்ற சொல்லும் அளவிற்கு 90களில் பிரபலமான நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் ஜெகதிஸ்ரீகுமார். கடந்த 2015 வரை பரபரப்பாக நடித்துக் கொண்டிருந்தவர், ஒரு விபத்தில் சிக்கி கடந்த நான்கு வருடங்களாக நடிக்காமல் ஓய்வெடுத்து வருகிறார்.

இந்த நிலையில் இவரது மகள் ஸ்ரீலட்சுமி திருமணம் இரு தினங்களுக்கு முன் நடைபெற்றது.  இந்த நிகழ்வில் தந்தையான ஜெகதிஸ்ரீகுமார் கலந்துகொள்ளவில்லை என்பதுதான் ஆச்சர்யம்… காரணம் ஸ்ரீலட்சுமி, ஜெகதிஸ்ரீகுமாரின் இரண்டாவது மனைவிக்கு பிறந்த மகள் ஆவார்.. 1980ல் ஷோபா என்பவரை மணந்து கொண்ட ஜெகதிஸ்ரீகுமார், பல வருடங்கள் கழிந்த நிலையில் 2012ல் கலா என்பவரும் தனது மனைவி தான் என பொதுவெளியில் அறிவித்தார்.I

இதன் காரணமாகத்தான் தற்போது ஜெகதிஸ்ரீகுமார் தனது மகள் ஸ்ரீலட்சுமி திருமணத்தில் கலந்து கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது என்று சொல்லப்படுகிறது. இருந்தாலும் மணமக்களுடன் ஜெகதிஸ்ரீகுமார் மற்றும் அவரது மனைவி கலாவும் இருப்பதுபோன்ற ஒரு பெயிண்டிங் ஒன்றை மணமக்களுக்கு பரிசாக அளித்தார் ஸ்ரீலட்சுமியின் தாயார் கலா.