முகநூல் மூலம் இளைஞருக்கு அடித்த அதிர்ஷ்டம்.. அமெரிக்க பெண்ணை திருமணம் செய்தது எப்படி..?

அமெரிக்காவை சேர்ந்த பிரட்டி (22) என்ற இளம்பெண் தன்னுடைய தாய் தந்தையருடன் இணைந்து தமிழ் கலாச்சாரத்தை பற்றி ஆராய்ச்சி செய்து வந்த நிலையில், இது தொடர்பான ஆய்விற்காக சில மாதங்களுக்கு முன்பு சென்னை வந்துள்ளனர்.

அங்கு ஒரு வீட்டில் தங்கியிருந்த படி இவர்கள் தமிழ் கலாச்சாரம் பற்றி ஆராய்ந்து வருகின்றனர்.

அப்போது பிரட்டி அவரது முகநூல் பக்கத்தில் தமிழ் கலாச்சாரம் பற்றி கூறுங்கள் என கேள்வி எழுப்பி இருந்தார்.

அதற்கு திட்டக்குடி அருகே உள்ள பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அகரம்சீகூர் என்ற கிராமத்தில் உள்ள சூரிய பிரகாஷ் (25) என்ற இளைஞர் ஒருவர் தமிழ் கலாச்சாரம் குறித்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ஆகியவற்றை தனது முகநூல் பக்கத்தில் பதிவு செய்தார்.

பிறகு, அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு பின்னாளில் அது காதலாக மாறி இருவரும் செல்போன் எண்ணை பரிமாறி பேசி வந்தனர்.

இருவரும் அவர்களது பெற்றோரின் சம்மதத்தை பெற்று திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.

இருவரது பெற்றோரும் இதற்கு சம்மதம் தெரிவிக்கவே நேற்று திட்டக்குடியில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.

இருவரும் மோதிரம் மற்றும் மாலை மாற்றி கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் சூரிய பிரகாஷின் உறவினர்கள், பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

இது குறித்து பிரட்டி, “தமிழர்களின் கலாச்சாரம், உணவு, உடை, அன்போடு பழகும் விதம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது.

எனவே, தான் நான் தமிழ் கலாச்சாரப்படி சேலை கட்டி வருகிறேன். இங்கு ஒருவரை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தேன்.

அப்போது எனக்கு சூரிய பிரகாஷுடன் அறிமுகம் ஏற்பட்டது. நட்பாக தொடங்கி பின்னர் இது காதலாக மாறியுள்ளது. இருவரது மனமும் ஒத்துப் போனதால் திருமணம் செய்ய ஏற்பாடு செய்துள்ளோம்.

தமிழ் கலாச்சாரம் படிதான் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அதன்படியே எங்களுக்கு திருமணம் நடைபெறும்.

அமெரிக்காவில் இருந்து இத்திருமணத்திற்கு எங்களது உறவினர்கள் வர இருக்கின்றனர்” என தெரிவித்துள்ளார்