முதன் முறையாக பிகினி உடையில் நடிகை அஞ்சலி – ரசிகர்கள் ஷாக்..! – இதுக்கு தான் உடல் எடை குறைச்சாரா..?

தமிழ் சினிமாவில் “கற்றது தமிழ் B.A.,” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் அஞ்சலி இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக ஆயுதம் செய்வோம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து அங்காடித்தெரு என்ற திரைப்படத்தில் தனது முழு நடிப்பையும் காட்டி ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்தார். தமிழை தாண்டி தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார். நடிகை அஞ்சலி நடிகர் ஜெய் இருவரும் காதலித்தார்கள் என்ற செய்தி இணையதளங்களில் வைரலானது ஆனால் தற்போது இருவரும் பிரிந்து விட்டார்கள்.

அதேபோல் அஞ்சலி மிகவும் ஓபன் ஆக திருமணம் பற்றியும் சினிமா சம்பந்தப்பட்டதைப் பற்றியும் பல பேட்டிகளில் பேசியுள்ளார். மேலும் தான் திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகப் போகிறார் என்று செய்திகள் வெளியாகின. ஆனால் அதை அஞ்சலி முற்றிலும் மறுத்துள்ளார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் தேவைப்பட்டால் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்கிறேன். முழுமையான நடிகை ஆவதற்கு நடிப்பில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் அக்கறையும், ஆர்வமும் இருக்க வேண்டும். சாதிக்க பிடிவாதமும் இருக்க வேண்டும்’ என்றார் அஞ்சலி.

இந்நிலையில், தற்போது பட வாய்ப்புகளே சுத்தமாக இல்லாத காரணத்தினால் மீண்டும் கவர்ச்சி களத்தில் தொபுக்கட்டீர் என குதித்துள்ளார் அம்மணி. இவர் தற்போது கமிட்டாகியுள்ள புதிய தெலுங்கு படமொன்றில் பிகினி உடையில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் என்று கூறுகிறார்கள். ஆனால், இது குறித்து எந்த வித அதிகாரபூர்வ தகவலும் படகுழுவிடம் இருந்து வரவில்லை.

இதுவரை பிகினி உடையில் நடிக்காமல் இருந்த அஞ்சலி. முதன் முறையாக பிகினி உடையில் நடிக்கவுள்ள தகவல் அவரது ரசிகர்களை ஷாக் ஆகியுள்ளது. இதற்காகத்தான் பொசு பொசுவென இருந்த அஞ்சலி உடல் எடையை குறைத்திருப்பரோ..? என்றும் பல ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இந்நிலையில், தற்போது ஸ்கூட்டர் அந்த கால ஸ்கூட்டரில் நின்றபடி எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் அம்மணி.