கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையை கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்த 17 வயது சிறுமி, சுதீஷ் என்ற வாலிபரை காதலித்து வந்துள்ளார். இவர் கல்லூரிக்குச் செல்லும் வழியில் பழக்கடை வைத்துள்ளார். தற்போது ஊரடங்கு நிலையில் செல்போனில் காதலனிடம் பேசிக்கொண்டிருந்த வேளையில், குடும்பத்தினருக்கு காதல் விவகாரம் தெரியவந்துள்ளது. பின்பு மாணவியின் படிப்பைக் குறித்து சிறிதும் கவலைப்படாத பெற்றோர், தங்களது சொந்தக்கார இளைஞருக்கு மகளுக்கு அவசரஅவசரமாக திருமணத்தினை முடித்துள்ளனர்.

இதையடுத்து முதலிரவிற்காக ஆயிரம் கனவுகளோடு மணமகனும், மனைவியின் அறைக்குச் சென்ற போது, அங்கு புதுப்பெண் தனது காதனிடம் போனில் பேசிக்கொண்டுள்ளார். மாப்பிள்ளை விசாரித்த போது உண்மையைக் கூறியுள்ளார். திருமணத்தில் சம்மதம் இல்லை என்றும் க ட்டா யப்படுத்தி திருமணம் செய்துவைத்ததையும் கூறியதையடுத்து, புதுமாப்பிள்ளை தான் ஏ மாற்றப்பட்டது தெரிந்ததும் அங்கிருந்து எஸ்கேப் ஆகியுள்ளார். பின்பு சிறுமி காதலனை வீட்டிற்கு வரவழைத்துள்ளார். காதலனும் காதலிக்கு திருமணம் ஆனது தெரியாத நிலையில் சுவர் ஏறி வந்ததை அவதானித்த பெண்ணின் பெற்றோர், காவல்நிலையத்தில் சதீஷை சி க்க வைத்துள்ளனர்.

பின்பு காதலனையும், தன்னையும் காப்பாற்றிக்கொள்ள சிறுமி பெற்றோர் தனக்கு விருப்பமில்லாமல் 17 வயதில் திருமணம் செய்துவைத்துள்ளனர் என்று கூறியதையடுத்து, போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதனிடையே பொலிசார் வழக்குப் பதிவு செய்யப்போவதை அறிந்த மாணவியின் பெற்றோர், மற்றும் மாமனார் மாமியார் காவல் நிலையத்திலிருந்து த ப்பி விட்டனர். காதலியை தன்னுடன் அனுப்பி வைப்பார்கள் எனக் காத்திருந்த காதலன் சுதீஷ் காவல்துறையிடம் சிக்கிக் கொண்டுள்ளார்.