விழாக்காலம் வந்துவிட்டாலே அனைத்து துணிக்கடைகளும் நகைக்கடைகளும் ஆளுக்கு ஒரு நடிகையை வைத்துக்கொண்டு விளம்பரம் எடுக்க ஆரம்பித்து விடுவார்கள்.அந்தவகையில் சற்று வித்தியாசமானது அண்ணாச்சி சரவணா செல்வரத்தினம் ஸ்டோர்ஸ்.நடிகை அல்லது நடிகர்களை வைத்து விளம்பரம் எடுக்காமல் கடைக்காக எடுக்கப்படும் விளம்பரங்களில் தானே நடித்துவிடுவதுதான் நம் சரவணா ஸ்டோர்ஸ் அருள் சரவணனின் ஸ்டைல்.ஹன்சிகா தமன்னா என பல முன்னணி கதாநாயகிகளுடன் ஆட்டம் போட்டு ஆரவாரம் செய்துள்ளார்.எவ்வளவுதான் கேலி கிண்டல்கள் வந்தாலும் தன்னம்பிக்கையுடன் அடுத்தடுத்த வீடியோக்களில் புதுமையாக பாடல் மற்றும் ஆட்டத்துடன் வந்து அனைவரையும் குதூகலப்படுத்துகிறார்.

இந்தநிலையில் இந்த தீபாவளிக்கும் புதிதாக ஒரு விடியோவுடன் வந்து அண்ணாச்சி அமர்க்களம் செய்துகொண்டிருக்கிறார். தற்போது மேலும் ஒரு தகவலாக சரவணா செல்வரத்தினம் அருள்சரவணன் புதிதாக ஒரு படத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.இந்த படத்தை இவரது கடைகளின் விளம்பரங்களை இயக்கம் ஆஸ்தான இயக்குனர்கள் ஜெடி மற்றும் ஜெரி ஆகிய இரு இயக்குனர்கள் இயக்கப்போவதாக தகவல்கள் வந்துள்ளன. இதற்க்கான கதை மற்றும் கதாபாத்திர தேர்வுகள் 90 சதவீதம் முடிந்துவிட்டதாகவும் விரைவில் படப்பிடிப்பை தொடங்கவிருப்பதாகவும் இயக்குனர்கள் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த படத்தில் ஆக்ஷன் காமெடி செண்டிமெண்ட் என அனைத்தும் கலந்து இருக்கும் எனவும் இயக்குனர்கள் தெரிவித்துள்ளனர்.தீபாவளி முடிந்து சில மாதங்களில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் பட்ஜெட் 30 கோடி மற்றும் இந்த படத்தை இவரே தயாரிக்கப்போகிறார் என்பது கூடுதல் தகவல்.மேலும் கதாநாயகிகள் தேர்வு மும்முரமாக நடந்துகொண்டிருக்கிறது. இவருக்கு ஜோடியாக ஏற்கனவே ஹன்சிகா தமன்னா என நடித்திருக்க இவரின் முதல் வெள்ளித்திரை படத்தில் தமன்னா ஜோடியாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமன்னாவுக்கு ஏற்கனவே அழைப்பு விடுத்துவிட்டதாகவும் தமன்னாவும் இதுவரை மறுப்பு எதுவும் தெரிவிக்கவில்லை என்றும் இயக்குனர்கள் ஜெடி மற்றும் ஜெரி கூறியுள்ளார்கள். எனவே அதிகபட்சமாக வருகிற தீபாவளிக்குள் யார் கதாநாயகி என்ற விபரம் நமக்கு தெரிந்துவிடும்.மேலும் முழுநேர நடிகராக சினிமாவுக்குள் வருவீர்களா என்ற கேள்விக்கு முதல் படத்தை பொறுத்துதான் அதெல்லாம் என கூறியுள்ளார் அருள் சரவணன் .தீபாவளி வரை சின்னத்திரையில் விளமபர நடனத்தில் அசத்தும் அருள்சரவணன் அடுத்த பொங்கலில் பெரியாத்திரையில் அசத்தினாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை.
