முதல் முறையாக தனது காதலியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட பாகுபலி நடிகர்..!! குவியும் திரைபிரபலங்களின் வாழ்த்துக்கள்!

பாகுபலி மற்றும் பாகுபலி 2 ஆகிய படங்களில் வில்லனாக நடித்த ராணா டகுபதி. இவர் நடிகை அனுஷ்கா மற்றும் த்ரிஷா உள்பட பல நடிகைகளுடன் காதலில் கிசுகிசுக்கப்பட்டார். அதன் பின்னர் அது வெறும் வதந்தி என்பதும் தெரிய வந்தது இந்த நிலையில் தற்போது ராணா டகுபதி தனது காதலியை தனது ட்விட்டர் பக்கத்தில் அறிமுகம் செய்துள்ளார். 

ஆகவே அந்தப் புகைப்படம் அவரது ரசிகர்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. ராணா அவரது பதிவில், ‘அவள் காதலுக்கு சம்மதம்’ கூறியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் காதலியின் பெயரை மிஹீகா பஜாஜ் என்று கூறி ஹேஷ்டேக் ஆக பயன்படுத்தியுள்ளார்.cஇந்த அறிவிப்பை ராணா வெளியிட்டவுடன் அவரது நண்பர்கள், திரைப் பிரபலங்கள் பலர் வாழ்த்து கூறி வருகின்றனர். குறிப்பாக சமந்தா, ஹன்சிகா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்டவர்கள் ராணாவை வாழ்த்தியுள்ளனர்.

மிஹீகா பஜாஜ், ஈவெண்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனத்தை நடத்தி வருகிறார். மும்பையை பூர்வீகமாக கொண்ட மிஹீகா, ஹைதராபாத்தில் பிறந்து வளர்ந்தவர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ராணா டகுபதியின் வருங்கால மனைவி குறித்த கூடுதல் விவரங்களுக்காக அவரது ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

 

View this post on Instagram

 

And she said Yes 🙂 ❤️#MiheekaBajaj

A post shared by Rana Daggubati (@ranadaggubati) on