குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் அன்சாரி – தஸ்லீம் தம்பதி வசித்து வருகின்றனர். கணவர் அன்சாரி வேலைக்கு எங்கும் செல்லாமல் ஊதாறித்தனமாக சுற்றி வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக குடும்பம் வறுமையை நோக்கி சென்றதால், வேலைக்கு செல்லுமாறு மனைவி கூற, முடியாது என கணவர் மறுக்க இதனாலேயே அடிக்கடி இருவருக்கும் சண்டை மூண்டு உள்ளது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இதே பிரச்சனையில் இருவருக்கும் சண்டை வர வேலைக்கு செல்லமுடியுமா முடியாது என கேட்டது மட்டும் அல்லாமல் கணவரை சரமாரியாக கடுமையாக பேசியுள்ளார் தஸ்லீம்.

இதனால் கோபமுற்ற கணவன் வீட்டின் மூலையில் போய் அமர்ந்து கொண்டார். இதனால் வேதனை அடைந்த மனைவி அவசரப்பட்டு அதிகம் திட்டிவிட்டோமோ என்று கணவர் அருகில் ஆறுதல் கூற சென்றார். அப்போது முத்தம் கொடுத்து கணவரை சமாதானம் செய்யலாம் என நினைத்து அருகில் செல்ல, ஏற்கனவே கொலைவெறியில் இருந்த கணவர் அன்சாரி, மனைவி தஸ்லீம் மனைவியின் நாக்கை வெளியில் இழுத்து கத்தியால் அறுத்து தூக்கி எறிந்தார். இதை அடுத்து வலியால் துடிதுடித்தார் தஸ்லீம். உடனே கையில் இருந்த செல்போனை எடுத்த தஸ்லீம் தனது தங்கைக்கு வீடியோ கால் போட்டார். பேசமுடியாமல் தவித்தார்.

இதை பார்த்த தங்கை உடனடியாக விரைந்து வந்து, தஸ்லீமாவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். உடனடியாக அறுவை சிகிச்சை செய்து தஸ்லீமின் நாக்கு இணைக்கப்பட்டது.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அன்சாரியிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். இனிமேலாவது யாரையாவது திட்டுவதாக இருந்தால் உனக்கு நாக்கு ரொம்ப நீளம் என திட்டாதீர்கள். கத்தி பதம் பார்த்துவிடும்.
