இந்தி திரையுலகின் பிரபல இளம் நடிகையான நைனா கங்குலி “பியூட்டிஃபுல்” என்ற திரைப்படத்தில் தற்போது நடித்து உள்ளார். இந்த திரைப்படத்தின் முன்னோட்ட விழா கோலாகலமாக திரைத்துறையினர் முன்னிலையில் சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது.

இந்த விழாவில் பங்கேற்ற ராம்கோபால் வர்மா நடிகை நைனா கங்குலி உடன் இணைந்து மேடையில் நடனம் ஆடியுள்ளார். ராம்கோபால் வர்மா ஒரு நடிகையுடன் மேடையில் ஆடுவது இதுவே முதல் முறை ஆகும். இதனைப் பார்த்த அங்கு வந்த மற்றவர்கள் ஆச்சரியத்தில் திகைத்து போனார்கள். ஏனென்றால் ராம் கோபால் வர்மா மிகவும் அமைதியானவர்.

தற்போது தயாரிப்பாளர் ராம் கோபால் வர்மா மேடையில் நடிகையுடன் நடனமாடிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. பியூட்டிஃபுல் திரைப்படமானது ரொமான்ஸ் மற்றும் காமெடி அடிப்படையில் உருவாக்கப்படும் திரைப்படமாகும். சமீபத்தில்தான் இந்த திரைப்படமானது தணிக்கை குழுவினர் இடமிருந்து “A” சான்றிதழைப் பெற்றது.