தளபதி விஜய் நடித்து வெளியான தமிழன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை ப்ரியங்கா சோப்ரா. அதன்பின்னர் ஹிந்தி திரையுலகிற்கு சென்ற இவர் ஹிந்தி சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறினார். பாலிவுட்டில் இருந்து ஹாலிவுட் சென்ற இவர் அங்கேயும் சாதித்து காட்டினார். அதன்பின்னர் பிரபல ஹாலிவுட் பாடகரும், நடிகருமான நிக் ஜோன்ஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

ப்ரியங்கா சோப்ராவை விட 10 வயது குறைவானவர் நிக் ஜோன்ஸ். திருமணத்திற்கு முன்பே பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து அதன்பின்னர் இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.சர்வதேச அளவில் சிறந்து விளங்கும் இசைக்கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் கிராமி விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.அந்த வகையில் 62வது கிராமி விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் நடைபெற்றது. 15 முறை கிராமி விருதினை வென்றவரான அலிசியா கீஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் அமெரிக்க பொப் பாடகரும், நடிகை பிரியங்கா சோப்ராவின் கணவருமான நிக் ஜோன்ஸ் தனது சகோதரர்களுடன் சேர்ந்து பாடல் பாடினார்.இதில் கலந்து கொள்வதற்காக பிரியங்கா சோப்ரா அணிந்து வந்த உடை பல்வேறு விமர்சனங்களை சந்தித்துள்ளது.நிக் ஜோன்சுடன் இவர் எடுத்துக் கொண்ட புகைப்படம் மற்றும் குடும்பமாக இவர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.