யாருக்கும் சொல்லாமல் திடீரென காதலனை கைப்பிடித்த பிரபல சீரியல் நாயகி !! தற்பொழுது வெளியிட்ட திருமண புகைப்படங்கள் !!

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை விட அதிகமாக மக்களால் பார்க்கப்படும் விசயங்களுல் ஒன்று சீரியல்.டிவி சேனல்களை பொறுத்தவரை அணைத்து சேனல்களும் போட்டிபோட்டுகொண்டு வித்தியாச வித்தியாசமான சீரியல்களை ஒளிபரப்பி கொண்டிருக்கிறது.

தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் ஒரு விஷயம் சீரியல் நடிகைகள் யாருக்கும் தெரியாமல் திடீரென திருமணம் செய்துகொள்வதுதான்.சமீபத்தில் கூட பல சீரியல் நடிகர் மற்றும் நடிகைகள் திடீரென திருமணம் செய்ததை நாம் பார்த்திருக்கிறோம். தமிழ், தெலுங்கு, மலையாளம் படங்களில் சின்ன, சின்ன கேரக்டர்களில் நடித்துக்கொண்டிருந்தவர் நக்ஸத்ரா. தொடர்ந்து படவாய்ப்புகள் இல்லாததால் சின்னத்திரை கரையோரம் ஒதுங்கினார்.

தற்போது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியலில் சிவகாமி என்னும் முதன்மை பாத்திரத்தில் நடித்து வருகிறார்.இதில் அவர் போலீஸாக நடிக்கிறார்.மக்களுக்கு பிடித்த வகையில் ஒளிபரப்பாகும் இந்த சீரியல் 180 எபிசோடுகள் தாண்டி ஓடியது. இப்போது அவர் நீண்டகாலம் காதலித்து வந்த நிர்மலா கிருஷ்ணன் என்பவரை திடீரென கல்யாணம் செய்து இருக்கிறார். கேரளத் தலைநகர் திருவனந்தபுரத்தில் இந்த திருமணம் நடந்திருக்கிறது.யாருக்கும் பெரிதாக சொல்லாமல் இந்த திருமணம் திடீரென நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.