இந்தியாவில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த இளம் தம்பதி இருவரும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது உத்தரபிரதேச மாநிலத்தின் Pratapgarh மாவட்டத்தை சேர்ந்தவர் ஷிவ் பகதூர் சரோஜ் (26). இவர் மனைவி கன்யா தேவி (24). இருவரும் நேற்று முன்தினம் இரவு தங்கள் வீட்டில் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவில் வீட்டின் சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இதையடுத்து இடிபாடுகளில் சிக்கி கொண்ட இருவரும் கூச்சலிட்டுள்ளனர். இதையடுத்து அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு சரோஜ் மற்றும் கன்யாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொலிசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
