சென்னை சேலையூரை சேர்ந்தவர் கீதா. இவருக்கும் சக்தி முருகன் என்பவருக்கும் திருமணம் நடந்த நிலையில் இருவரும் அவுஸ்திரேலியாவில் வசித்தனர். இவர்களுக்கு ஹிரித்திக் என்ற ஆறு மாத ஆண் குழந்தை உள்ளான். இந்நிலையில் கீதா தனது தாய் மற்றும் குழந்தையுடன் அவுஸ்திரேலியாவில் இருந்து கோலாலம்பூர் வழியாக, இன்று அதிகாலை உள்ளூர் நேரப்படி விமானத்தில் சென்னை வந்தடைந்தார். அப்போது விமானத்தில் பயணித்த கீதாவின் குழந்தை ஹிரித்திக் உயிரிழந்தது.

குழந்தை ஹிரித்திக் உயிரிழந்தது தெரியாமல் கீதா விமான நிலைய வரிசையில் நின்று கொண்டிருந்தார், அப்போது தான் குழந்தை சுயநினைவின்றி இருப்பதை கண்டுபிடித்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு குழந்தை ஹிரத்திக்கை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவன் இறந்து இரண்டு மணி நேரத்துக்கு மேல் ஆனதாக தெரிவித்தனர், இதையடுத்து கீதா கதறி அழுதார்.

இதையடுத்து ஹிரித்திக்கின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குழந்தை இறப்புக்கான காரணம் குறித்து விரைவில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் குழந்தை இறந்தது தெரியாமல் தாய் அதை கையில் வைத்திருந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.