வேட்டி அணிந்து வருபவர்களுக்கு பிரியாணி இலவசம்…!!! சென்னையை கலக்கும் பிரியாணி கடை.

இந்தியாவில் உணவு பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது பிரியாணி. இந்தியாவில் சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வு ஒன்றில் விருப்பி சாப்பிடும் உணவில் முதல் இடத்தை பிடித்துள்ளது பிரியாணி. நாம் அன்றாடம் சாப்பிடும் உணவில் ஒன்றாகி விட்டது பிரியாணி.

பிரியாணி விரும்பி உண்பதற்கு என்றே தனி உணவு பிரியர்கள் பிரியாணி தேடி தேடி வாங்கி உண்கின்றனர்.  சமீபகாலமாக ஹோட்டல் உரிமையாளர்கள் மக்களை கவருவதற்காக பல சலுகைகள் கொடுத்து வருகின்றனர். கடந்த 2015 ஆம் ஆண்டு கோ ஆப் டெஸ்ட் நிறுவனத்தின் செயல் இயக்குனராக இருந்த ஐ ஏ எஸ் அதிகாரி சகாயம் அவர்கள் ஜனவரி 6 ஆம் தேதி உலக வேட்டி தினமாக அறிவித்தார்.

அதையடுத்து ஆண்டுதோறும் ஜனவரி 6 தேதி வேட்டி கட்டும் தினமாக கொண்டாடப்படுகிறது.  சென்னையில் உள்ள பிரபல பிரியாணி கடை ஒன்றில் ஜனவரி 6 ஆம் தேதி வேட்டி அணிந்து வரும் முதல் 50 நபர்களுக்கு ஒரு பிரியாணி வாங்கினால் இன்னொரு பிரியாணி இலவசம் என்று அறிவித்து உள்ளனர். இதனை அறிந்த பிரியாணி பிரியர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.