1 இல்ல 2 இல்ல 25 பேரிடம் ஏமாந்தேன்…. பரபரப்பை கிளப்பிய பிரபல நடிகை…. ரசிகர்கள் ஷாக்….!!!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ஸ்ரீ ரெட்டி. இவர் பல இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் மீது ஏற்கனவே புகார்களை கொடுத்த நிலையில் அரை நிர்வாணமாக பொதுவெளியில் போராட்டமும் நடத்தியுள்ளார். இவர் எப்போதுமே சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார்.இதனிடையே சமீபத்தில் பிரபல ஊடகத்திற்கு இவர் அளித்த பேட்டியில், நான் என்னுடைய அம்மா முன்பு கூட ஆடை மாற்ற மாட்டேன்.

அப்படிப்பட்ட நான் எப்படி அனைவருக்கும் முன்பு ஆடையை கழட்டி போராட்டம் நடத்தினேன் என்று எனக்கே தெரியவில்லை. என் குடும்பத்தில் உள்ள யாருமே என்னிடம் பேசுவதில்லை.நான் அப்படி செய்த போது எனது குடும்பத்திற்கு எப்படி இருந்திருக்கும் என்பதை நினைக்கும் போது மிகவும் வருத்தமாக இருக்கிறது.

இதுவரை நான் 25 பேரிடம் ஏமாந்துள்ளேன். திரைத் துறையில் மிகப்பெரிய இயக்குனர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள் என பலரும் என்னை ஏமாற்றி விட்டனர். நான் இந்த சமயத்தில் ஒன்று மட்டும் சொல்ல விரும்புகிறேன். இளம் நடிகைகள் கதைக்கு தேவை என்றால் மட்டும் கவர்ச்சி காட்டுங்கள். இல்லையென்றால் யாரும் அப்படி செய்ய வேண்டாம் என்று அவர் கூறியுள்ளது சினிமா வட்டாரத்தில் புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது.