25 ஆண்டுகளுக்குள் 150 படம்…. இசை ஜாம்பவான் யுவன் சங்கர் ராஜாவுக்கு….. கௌரவ டாக்டர் பட்டம்…!!!

தமிழ் சினிமாவில் இன்று சிறந்த இசையமைப்பாளராக ஜொலித்துக் கொண்டிருப்பவர் யுவன் சங்கர் ராஜா. தனது தந்தை இளையராஜா போலவே கொடிகட்டி பறந்து கொண்டிருக்கிறார். இவர் பல்வேறு சிறந்த படங்களுக்கு இசையமைத்து சினிமா உலகில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துள்ளார்.

இவர் இசைக்காக இன்றும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றன. இவர் முதன்முதலில் அரவிந்தன் என்ற திரைப்படத்தில் இசையமைத்து தனது திரைப்பயணத்தை தொடங்கிய நிலையில் தற்போது முன்னணி நடிகர்களான அஜித் மற்றும் விஜய் படங்களுக்கு சிறந்த தீம் மியூசிக் போட்டு அசத்தியுள்ளார்.

இந்நிலையில் சென்னை செம்மஞ்சேரியில் உள்ள சத்தியபாமா நிகழ்நிலை பல்கலைக்கழகத்தின் 31 வது பட்டமளிப்பு விழாவில் திரைப்படத்துறையில் தனது 16 வயது முதல் இசையமைப்பாளராக பணியை தொடங்கி 25 ஆண்டுகளுக்குள் 150 படங்களுக்கு மேலாக பல்வேறு மொழிகளில் இசையமைப்பாளராக சாதனை படைத்த யுவன் சங்கர் ராஜாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து யுவன் சங்கர் ராஜாவுக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.