ஒரு வருடத்திற்கு முன்பே ரகசிய திருமணம்…. ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த குக் வித் கோமாளி புகழ்…. வெளியான புகைப்படம்….!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர்தான் புகழ். அந்நிகழ்ச்சியில் ஒரு சில நாட்கள் மட்டுமே இருந்து வெளியேறிய இவர் அடுத்ததாக விஜய் டிவியில் ஒளிபரப்பான சிரிப்புடா என்ற நகைச்சுவை நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மிகவும் பிரபலமானார். இருந்தாலும் விஜய் டிவி கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் தான் இவர் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானார்.

அந்த நிகழ்ச்சியில் இவர் செய்யும் காமெடிகளுக்கு அளவே இல்லை. அந்நிகழ்ச்சியை தொடங்க இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. தற்போது சபாபதி, வலிமை, யானை மற்றும் என்ன சொல்லப் போகிறாய் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் சில பட வாய்ப்புகளும் இவர் கைவசம் வைத்துள்ளார். அது மட்டுமல்லாமல் Zoo கீப்பர் எனும் திரைப்படத்தின் மூலம் ஹீரோவாகவும் அறிமுகமாக உள்ளார்.

இந்நிலையில் அவரின் நீண்ட நாள் காதலியை நேற்று முன்தினம் திருமணம் செய்து கொண்டார்.இதனைத் தொடர்ந்து புதுமண தம்பதிகளுக்கு பலரும் திருமண வாழ்த்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். இதனைத் தொடர்ந்து விரைவில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை சென்னையில் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் நடிகர் புகழ் கடந்த வருடமே அவரது காதலை பென்சியாவை பதிவு திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. கோவையில் உள்ள பெரியார் படிப்பகத்தில் இருவரும் கடந்த ஆண்டு திருமணம் செய்திருப்பது தற்போது தெரியவந்துள்ளது. இவர்களின் காதலுக்கு குடும்பத்தினர் முதலில் எதிர்ப்பு தெரிவித்ததால் இருவரும் கடந்த ஆண்டு பதிவு திருமணம் செய்து கொண்டதாகவும் அதன் பிறகு குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்ததால் அனைவரும் முன்னிலையிலும் முறைப்படி திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.