18 வருடங்களுக்கே முன்பே…. மிக பெரிய வாய்ப்பை தவற விட்ட நடிகர் கார்த்தி… இன்று டாப் ஹிரோ…..!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் சூர்யாவின் தம்பியான நடிகர் கார்த்தி. இவரின் நடிப்பில் அண்மையில் வெளியான விருமன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் வெளியான ஒரு வாரத்திற்குள் 50 கோடி வரை வசூல் செய்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து மணிரத்தினம் இயக்கத்தில் நடித்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் இந்த மாதம் வெளியாக உள்ளது.படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் விரைவில் ஆரம்பிக்கப்பட உள்ள நிலையில் கார்த்தி மற்றும் மணிரத்தினத்தின் முதல் சந்திப்பு குறித்த சுவாரஸ்யமான தகவல் ஒன்று தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

அதாவது மணிரத்தினம் இயக்கத்தில் உருவான ஆயுத எழுத்து திரைப்படத்தில் கார்த்தி அசிஸ்டன்ட் டைரக்டராக பணி புரிந்தது பலரும் அறிந்த ஒன்றுதான். வெளிநாட்டில் படித்துக் கொண்டிருந்த கார்த்தி எப்படியாவது மணிரத்தினத்திடம் உதவி இயக்குனராக சேர வேண்டும் என்ற எண்ணத்தில் சென்னைக்கு வந்தார். ஆனால் அப்போது எதிர்பாராத விதமாக ஆயுத எழுத்து திரைப்படத்தில் நடிக்கும் மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்தது.

மணிரத்தினம் இயக்கிய ஆயுத எழுத்து படத்தில் மாதவன்,சூர்யா மற்றும் சித்தார்த்த ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இதனிடையே சூர்யாவுக்கு தம்பி போன்ற ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு நடிகர்கள் தேர்வு செய்யப்பட்டு கொண்டிருந்தபோது, பலரும் சூர்யாவின் தம்பியை கேட்டு பார்க்கலாம் என கூறிய நிலையில் மணிரத்தினமும் கார்த்திகை வரச்சொன்னார்.

உதவி இயக்குனராக வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த கார்த்திக்கு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்த நிலையில் மணிரத்தினத்தை பார்க்க சென்றார். ஆனால் சற்று பூசின உடம்பு போல் இருந்ததால் கார்த்தியை பார்த்த மணிரத்தினம் மிகவும் தயங்கினார். அதனை புரிந்து கொண்ட கார்த்தி உடனே தான் நடிப்பதற்காக ஒன்னும் வரவில்லை உங்களிடம் உதவி இயக்குனராக சேர வேண்டும் என்ற ஆசை எனக்கு உள்ளது என கூறியுள்ளார்.

 

உடனே சற்றும் யோசிக்காமல் மணிரத்தினம் சம்மதம் தெரிவித்துவிட்ட நிலையில் கார்த்திக் நடிக்க இருந்த அந்த கதாபாத்திரத்திற்கு பதிலாக சித்தார்த் அதில் தேர்வு செய்யப்பட்டார். இவ்வாறு ஆயுத எழுத்து திரைப்படத்தின் மூலம் தான் அசிஸ்டன்டாக கார்த்தி தனது திரைப்பயணத்தை தொடங்கி தற்போது முன்னணி ஹீரோவாக வளர்ந்து நிற்கிறார்.