நான் அதை தான் சாப்பிடுவேன்…. அதுல உங்களுக்கு என்ன பிரச்சனை?…. வெளிப்படையாக பேசிய துஷாரா விஜயன்….!!!!

இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் துஷாரா விஜயன்,காளிதாஸ் ஜெயராமன் மற்றும் கலையரசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்கள் நடித்துள்ள நட்சத்திரம் நகர்கிறது திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி வெளியானது. இப்படத்திற்கு தென்மா இசை அமைத்துள்ளார். யாழி பிலிம்ஸ் உடன் இணைந்து பா ரஞ்சித்தின் நீளம் ப்ரொடக்ஷன் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது.

இப்படத்தில் துஷாரா விஜயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த அசத்தியுள்ளார். பா ரஞ்சித் இயக்கத்தில் உருவான சர்பட்டா பரம்பரை திரைப்படம் மாபெரும் வெற்றியைத் தேடித் தந்த நிலையில் அழகிய காதல் கதையை மையமாகக் கொண்டு நட்சத்திரம் நகர்கிறது திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே சர்பட்டா பரம்பரை திரைப்படத்தில் நடித்த ரசிகர்களை வெகுவாக கவர்ந்த துஷாரா விஜயன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்து உள்ளார். இந்நிலையில் சமீபத்தில் துஷாரா விஜயன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது நீங்க மாட்டுக்கறி சாப்பிடுவீங்களா என்று கேட்கப்பட்ட போது அதற்கு பதில் அளித்த துஷாரா விஜயன், ஆம் நான் மாட்டுக்கறி சாப்பிடுவேன்,அது எனக்கு மிகவும் பிடிக்கும் என்று வெளிப்படையாக பதில் அளித்தார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.