தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் நடிகர் விஜய். இவரின் நடிப்பில் அடுத்ததாக வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இந்நிலையில் விஜய் நடிப்பில் வெளியாகி மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற படத்தின் பட்ஜெட் மற்றும் வசூல் நிலவரம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது தரணி இயக்கத்தில் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கில்லி. இந்த படத்தில் நடிகர் விஜய் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக திரிஷா நடித்திருப்பார். இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் எட்டு கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் உலகம் முழுவதும் 50 கோடி ரூபாய் வசூல் செய்து மிகப் பெரிய அளவில் வெற்றியை பெற்றுள்ளதாக அண்மையில் தகவல் வெளியாகி உள்ளது.இத்தனை வருடங்கள் கழித்து இந்த தகவல் வெளிவந்ததால் விஜய் ரசிகர்கள் அனைவரும் குஷியில் உள்ளனர். இது விஜய் ரசிகர்கள் மத்தியில் இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
