பிரபல இசை அமைப்பாளர் ஆன டி. இமான் மற்றும் சாஃப்ட்வேர் இன்ஜினியரான மோனிகா என்பவருக்கும் 2008 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் கிட்டத்தட்ட 12 வருட குடும்ப வாழ்க்கைக்கு பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர். இந்தச் செய்தி ஒரு வருடம் கழித்து தான் வெளியாகிறது.
அண்மையில் டி.இமான், பிரபல கலை இயக்குனர் உபால்டுவின் மகள் எமிலி என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவருக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ளதாக திருமணத்தின்போது டி இமான் தெரிவித்தார். அதோடு தனது மகள்கள் உடைய பாஸ்போர்ட் தன்னிடம்தான் இருக்கிறது என்றும், அந்த பாஸ்போர்ட் தொலைந்து விட்டதாக கூறி போய் பாஸ்போர்ட் வாங்கி தனது இரண்டு குழந்தைகளையும் தன்னிடம் இருந்து பிரித்து வெளிநாட்டிற்கு தனது மனைவி அழைத்துச் செல்ல திட்டமிட்டு இருப்பதாக இவர் வழக்கு தொடர்ந்தார்.
இந்நிலையில் அந்த வழக்கில் தனக்கு சாதகமாக தீர்ப்பு அமைந்திருப்பதாக மோனிகா தெரிவித்துள்ளார். அதாவது இரண்டு பெண் குழந்தைகளையும் தனது பொறுப்பில் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டு இருப்பதாகவும் அவர்களின் பாஸ்போர்ட் தன்னிடம் தான் இருக்கும் என்றும் மகிழ்ச்சியுடன் இதனை மோனிகா வெளிப்படுத்தியுள்ளார்.