தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்று அறியப்படும் ரஜினிகாந்த் முன்னணி நடிகராக பலம் வருபவர். இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இவரைப் போலவே சினிமா உலகில் கமலும் முன்னணி நடிகர் தான். இவர்களின் வயது ஒரு பக்கம் இருந்தாலும் சினிமா ஆர்வம் மட்டும் குறையாமல் இருவரும் தொடர்ந்து நடித்துக் கொண்டே வருகின்றன. இப்போதைய நடிகர்கள் கூட ரஜினி கமலை முந்த முடியாமல் தடுமாறுகின்றனர்.

ஆனால் இவர்கள் இருவரையும் நடுங்க வைத்த ஒரு சில நடிகர்கள் 90 காலகட்டங்களில் இருந்துள்ளனர். அதிலும் குறிப்பாக ரஜினிக்கு இரண்டு நடிகர்கள் பெரும் பயத்தை காட்டியுள்ளனர். அவர்கள் வேறு யாரும் அல்ல ராமராஜன் மற்றும் ராஜ்கிரன் தான். ராமராஜன் நடித்த கரகாட்டக்காரன் திரைப்படம் பல வாரங்கள் திரையரங்குகளில் ஹவுஸ் ஃபுல்லாக ஓடியது.

அவர் பெரும்பாலும் கிராமத்து கதைகளை தேர்ந்தெடுத்து நடித்ததால் பெரிய அளவில் வசூலை குவித்தது. அதனைப் போலவே ராஜ்கிரனும் தொடர்ந்து அவரது ஸ்டைலில் வில்லன்களை அடிப்பது மற்றும் எலும்பை அடித்து நொறுக்குவது போன்ற ஸ்டைல் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தது.

அது மட்டுமல்லாமல்ஒரு காலகட்டத்தில் ரஜினியே, ராஜ்கிரன் எல்லாம் போன் பண்ணி என் படத்தை ரிலீஸ் செய்யப் போகிறார்கள் நீங்கள் உங்கள் படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைக்க முடியுமா என்ற அளவிற்கு எல்லாம் கேட்டுள்ளாராம். அந்த அளவிற்கு ராஜ்கிரன் மற்றும் ராமராஜனின் சினிமா பயணம் இருந்துள்ளது. ஒரு கட்டத்தில் இவர்கள் இருவரும் தனது பாதையை மாற்றிக் கொண்டனர்.