குக் வித் கோமாளி புகழுடன் இணையும் அம்மு அபிராமி….. வெளியான சூப்பர் அப்டேட்….. குஷியில் ரசிகர்கள்….!!!!

தமிழ் சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை அம்மு அபிராமி. இவர் ராட்சசன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.

பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று மூன்றாம் இடத்தை தட்டி சென்றார். இந்நிலையில் உலகநாதன் சந்திரசேகரன் இயக்கத்தில் உருவாக உள்ள குதூகலம் திரைப்படத்தில் கதாநாயகனாக பாலமுருகன் அறிமுகமாகிறார்.

இவருக்கு ஜோடியாக நடிக்க அம்மு அபிராமி கமிட்டாகி உள்ளாராம். அது மட்டுமல்லாமல் இந்த படத்தில் குக் வித் கோமாளி புகழும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.