20 முறைக்கு மேல் அபார்ஷன்.. கள்ளக்காதல் மோகம் குடும்பத்தை சூப் வைத்து 47 வயது பெண்..! அதிரவைக்கும் லீலைகள்

சொத்துக்காக குடும்ப உறுப்பினர்கள் 6 பேரை ஆட்டுக்கால் சூப்பில் சய னை டு வைத்து கொ ன் றார் ஜோலி என்ற 47 வயது பெண். 17 வருடங்களுக்கு முன்பு இந்த கொ லைகளை செய்த ஜோலி இப்போது கைதாகி உள்ளார்.கோழிக்கோடு பகுதியில் நடந்துள்ள இந்த சம்பவம் அனைவரையும் நடுநடுங்க வைத்துள்ளது. சொத்துக்காக கொ லை என்றாலும், பெண்களை கண்டால் ஜோலிக்கு சுத்தமாக பிடிக்காதாம். அதனால் கொ லை செய்த 6 பேரில் 3 பேர் மாமியார் உட்பட பெண்களாக இருந்திருக்கிறார்கள். இவரிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.பெண்களை மட்டும் குறிவைத்து கொ லைசெய்தது எதற்காக என்பதை அவர் கூறவில்லை.


ஒவ்வொரு நாளும் ஜோலியிடம் விசாரணை நடத்தும்போதும், வெளியாகும் ஒவ்வொரு தகவல்களும் நமக்கு தலையே சுற்றுவது போல் உள்ளது. மாமனாருக்கு காபியில் வி ஷம் கலந்து மாமியாருக்கு சூப்பில் வி ஷம் கலந்து தந்துள்ளார். எல்லோருமே மருமகள் தரும் சாப்பாட்டை நம்பி சாப்பிட்டே செத்து போயுள்ளனர்.யாருக்கும் சந்தேகம் இல்லாமல் இந்த காரியங்களை லாவகமாக செய்து முடித்துள்ளார் ஜோலி. இதற்காகவே சய னைடு வி ஷத்தை டப்பா, டப்பாவாக ஜோலி வாங்கி வீடு முழுக்க வைத்திருக்கிறார். 3-வது கல்யாணம் பண்ண துணிந்த ஜோலிக்கு ஏகப்பட்ட ஆண் நண்பர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்களுடன் அடிக்கடி வெளியில் ஊர்சுற்றி வந்துள்ளார்.. நிறைய இடங்களுக்கும் போய் தங்கி உள்ளார்.. நெருக்கமாக இருந்ததில் உண்டான கர்ப்பங்களை ஏகப்பட்ட முறை அபா ர் ஷன் செய்துள்ளார்.

இதில் ஒரே ஒரு ஆண் நண்பருடன் அடிக்கடி ஊர் சுற்றி உள்ளார். இதை ஜோலியின் செல்போனை ஆராய்ந்தபோதுதான் போலீசாருக்கு தெரியவந்தது. அந்த ஆண் நண்பர் கோவையை சேர்ந்தவராம். யார், என்ன என்று தெரியவில்லை. முதலில் இதை பற்றி கேட்டதற்கு, ஜோலி மறுத்துள்ளார். பிறகு போலீசார் துருவி துருவி கேட்கவும்தான், ஆண் நண்பரை பற்றி ஒப்புக் கொண்டுள்ளார். ஆண் நண்பருடன் கோவை வந்து போவது, ஜோலி வீட்டு உறவினர்களுக்கும் தெரிந்திருக்கிறது. அதனால், அந்த ஆண் நண்பரிடம் கோவை வந்து கேரள போலீசார் விசாரிக்க உள்ளனர்.

அதுவும், ஜோலியின் போலீஸ் காவல் முடிவதற்கு முன்னமேயே கோவைக்கு ஜோலியுடன் வந்து விசாரிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், போலீசார் என்ன கேள்வி கேட்டாலும் சரி, ஜோலி கொஞ்சம் கூட டென்ஷன் ஆவதே கிடையாது. ஒரு பதட்டமும் இல்லாமல் கூலாக பதில் சொல்லி கொண்டிருக்கிறார். ஒருபடி மேல போய், ஏன் என்னை நீங்க கைது செய்யவில்லை என்று போலீசாரிடமே கேள்வியும் கேட்டுள்ளார்.