மக்களுக்கு விமோத பழக்கங்கள் இருப்பது புதிதல்ல.ஆனால் இங்கு பல வருடங்களாக தனது தலை முடியை உண்ண பழகிய ஒரு இளம் பெண் ஒருவருக்கு மேற்கொண்ட அறுவைச் சிகிச்சை தொடர்பில் வெளிநாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.இந்தியாவின் மும்பை ராஜ்வாஜ் பகுதியில் உள்ள மருத்துவமனையொன்றில் இந்த அறுவைச் சிகிச்சை இடம்பெற்றுள்ளது.

20 வயதான இளம் பெண்ணின் பல வருட பழக்கத்தால் ஏற்பட்டுள்ள விபரீதம்! வெளிவந்த புகைப்படங்கள்! 20 வயதான இந்த இளம் பெண்ணுக்கு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், அவரின் வயிற்றில் இருந்த 2 அடி இரத்தால் உறைந்த முடி அகற்றப்பட்டுள்ளது.இந்த பெண்ணுக்கு வாந்தி மற்றும் வயிற்று வலி அதீதமாக ஏற்பட்டுள்ள ஒரு நிலையில், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்றுள்ள போது இந்த செய்தி தெரியவந்துள்ளது.

இந்த அறுவை சிகிச்சைக்கு முன் இந்த பெண் 66 கிலோ நிறையுடையவராக இருந்ததாக சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.இவ்வாறு தமது தலை முடியை உண்பது, ரிபேன்சல் சின்ரம்ஸ் என்ற மனநோய் என மன நல மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இது குறித்து அந்த பெண்ணின் வயிற்றில் இருந்து எடுக்கப்பட்டுள்ள முடியின் நீளம் 10 அங்குலமும், அதன் அகலம் 4.7 அங்குலமும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த ஆகஸ்ட் 31 ஆம் திகதி மாதம் இந்த அறுவை சிகிச்சை இடம்பெற்றுள்ள நிலையில், அந்த இளம்பெண் தற்போது நலமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
