நடிகர் ராதாரவி லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவை ஒரு விதமாக பேசியது தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. நயன்தாரா நடித்துள்ள கொலையுதிர் காலம் படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய ராதாரவி… “நயன்தாரா ஒரு பக்கம் பேயாவும் நடிக்கிறாங்க மறுபக்கம் சீதாவாவும் நடிக்கிறாங்க. யார் வேணும்னாலும் சாமி வேஷம் போடலாம், பார்த்த ஒடனே கும்மிடுறவங்களும் போடலாம் பார்த்த ஒடனே கூப்பிட்றவங்களும் போடலாம்.” இவ்வாறு ஒருவிதமாக தவறான வார்த்தைகளை பயன்படுத்தி பேசியிருந்தார். இதற்கு தற்போது கண்டனங்கள் வலுத்து வருகிறது.
குறிப்பாக நயன்தாராவின் காதலர், இயக்குனர் விக்னேஷ் சிவன் மிக கடுமையாக விமர்சித்துப் பேசி வருகிறார். தற்போது கடந்த 2018 மற்றும் 2017 ஆம் ஆண்டு ராதாரவியின் மீதிருந்த பாலியல் சர்ச்சைகளை தோண்டி எடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் விக்னேஷ் சிவன். இது குறித்து அவர் ட்வீட் செய்துள்ளதாவது… அதாவது கடந்த 2018 ஆம் ஆண்டு நடிகை ஒருவர் ராதாரவியின் மீது பாலியல் குற்றங்களை சுமத்தி இருந்தார்.
அதன் பின்னர் MeToo இயக்கத்தினையும் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் கேலியாக பேசி இருந்தார். அதனைத் தாண்டி 2017 ஆம் ஆண்டு ஊனமுற்ற குழந்தைகளை பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.
இதே ராதாரவி தொடர்ந்து குழந்தைகள் மற்றும் பெண்களை கேவலமாக சித்தரித்து பேசிவரும் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று விக்னேஷ் சிவன் தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.
In 2018, there was a sexual harassment complaint against Mr.Radha Ravi by a distressed actress, who feared to reveal her identity. He walked scotfree. A little later Mr.Radha Ravi scandalously & insensitively mocked at the #MeToo movement.
— Vignesh Shivan (@VigneshShivN) March 24, 2019