மங்களரகமான விகாரி வருடம், வசந்த ருதுவுடன், உத்தராயன புண்ணிய காலம் நிறைந்த ஞாயிற்றுக்கிழமை பகல் 1 மணி 7 நிமிடத்துக்கு, 14/4/19 அன்று பிறக்கிறது. அன்றைய தினம் சுக்ல பட்சத்தில், ஆயில்ய நட்சத்திரம் 2-ம் பாதம், கடக ராசியில், கடக லக்னத்தில்… நவாம்சத்தில் தனுசு லக்னம், மகர ராசியில் விகாரி புத்தாண்டு பிறக்கிறது. இந்தப் புத்தாண்டில் ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் உரிய ராசிபலன்களை உரிய பரிகாரங்களுடன் தற்போது காணலாம்.
மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)
நண்பர்கள் வட்டாரம் அதிகம் கொண்டுள்ள மேஷ ராசி அன்பர்களே இந்த மாதம் தெளிவான சிந்தனை தோன்றும். எந்த காரியத்தையும் செய்யும் முன் ஆலோசனை செய்து அதில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். சாமர்த்தியமான உங்களது செயல் கண்டு மற்றவர்கள் ஆச்சரியப்படுவார்கள். முக்கிய நபர்கள், அந்தஸ்தில் உயர்ந்தவர்கள் நட்பு கிடைக்கும். அதனால் கவுரவம் அதிகரிக்கும். புதிய தொடர்புகள் மகிழ்ச்சி தரும். குடும்பத்தில் வாழ்க்கை துணை உங்களுக்கு ஆதரவாக இருப்பார். பிள்ளைகளின் நலனுக்காக பாடுபடுவீர்கள். விருந்தினர் வருகை இருக்கும். தடைபட்டு வந்த திருமண காரியங்கள் சாதகமாக நடக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். குடும்பத்தில் வீண் விவாதங்கள் தோன்றும். கவனம் தேவை.
தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். வரவேண்டிய பணம் தாமதமாக வரும். சரக்குகள் வருவதும் புதிய ஆர்டர்கள் கிடைப்பதும் எதிர்பார்த்ததை விட குறைவாக இருக்கும். தொழில், வியாபாரம் தொடர்பான அலைச்சல்களும் ஏற்படும். கவனமாக இருப்பது அவசியம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கடுமையான வேலை இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை சுமை குறையும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். கடினமாக காரியங்களையும், திறமையாக செய்து முடிப்பீர்கள். பெண்கள் எடுத்த வேலையை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பெரியோர் மூலம் அனுகூலம் உண்டாகும். பணவரத்து திருப்தி தரும்.
கலைத்துறையினருக்கு நீங்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த பட வாய்ப்புகள் கிடைக்கப்பெற்று உங்களின் திறமைகளை வெளியுலகத்திற்குத் தெரியப்படுத்துவீர்கள். கலை சம்பந்தப்பட்ட துறைகளிலும் நல்ல உயர்வுகளைப் பெறமுடியும். நிலுவையில் இருந்த பணப்பாக்கிகளும் திருப்திகரமாக கைக்கு வந்து சேரும்.
அரசியல்வாதிகளின் பெயர், புகழ் அதிகரிக்கக்கூடிய காலமாகும். எடுக்கும் காரியங்களில் வெற்றி கிட்டும். மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியும். பதவிக்கு இருந்த இடையூறுகள் விலகி எதிர்பார்க்கும் உயர்வுகளை அடைவீர்கள். உங்களின் வார்த்தைகளுக்கு மதிப்பும், மரியாதையும் உயரும். மாணவர்கள் கவனம் சிதற விடாமல் பாடங்களை படிப்பது நல்லது. விளையாட்டுகளின் போது கவனம் தேவை.
அஸ்வினி:
இந்த மாதம் பொன்னான வாய்ப்புகள் தேடி வரும். வாழ்க்கைவளம் முன்னேறும். தைரியமாகவும் அதே வேளையில் தெய்வ அனுகூலத்துடனும் காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். சகோதர சகோதரிகளிடம் நெருக்கம் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தினில் சிற்சில பிரச்சனைகள் வரலாம். உடன் வேலை செய்வோரின் ஆதரவால் அதனைச் சமாளிப்பீர்கள்.
பரணி:
இந்த மாதம் குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் தங்கு தடையின்றி நடக்கும். தேவைகள் பூர்த்தியாகும். கணவன் மனைவி இடையே அன்பு நீடிக்கும். ஆனாலும் வீட்டில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் தலைதூக்கலாம். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போவதால் நிலைமையைச் சமாளிக்கலாம். உறவினர் வகையிலும் கூட ஒருவருடன் மனஸ்தாபம் உருவாகலாம்.
கார்த்திகை 1ம் பாதம்:
இந்த மாதம் அதீத எதிர்பார்ப்புகள் வேண்டாம். சிலருக்கு தூரத்திலிருந்து விரும்பத்தகாத செய்திகள் வரலாம். தீவிர முயற்சிகளின் பேரில் சிலருக்கு சுபமான நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். உழைப்புக்கு ஏற்ற பிரதிபலன் கிடைக்காமல் இருந்தவர்களுக்கு தற்போதைய காலகட்டத்தில் நன்மை நடக்கும்.
பரிகாரம்: தினமும் அருகிலுள்ள முருகன் கோவிலுக்கு சென்று வர பிரச்சினைகள் நீங்கும். அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், செவ்வாய் சந்திராஷ்டம தினங்கள்: ஏப்ரல்: 22, 23 அதிர்ஷ்ட தினங்கள்: ஏப்ரல்: 15, 16; மே: 13, 14.
ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள் ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்)
அடுத்தவர் பிரச்சினைகளை தலையில் போட்டுக் கொள்ளும் ரிஷப ராசி அன்பர்களே இந்த மாதம் எல்லா விதத்திலும் நன்மை உண்டாகும். எதையும் துணிச்சலுடன் எதிர் கொள்வீர்கள். தடைபட்டு வந்த காரியங்களில் தடை நீங்கும். சாமர்த்தியமான பேச்சால் ஆதாயம் உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும். உங்கள் செயல்களுக்கு தடைகளை ஏற்படுத்தியவர்கள் தாமாகவே விலகி செல்வார்கள்.
குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். குடும்பத்தினருக்காக பொருட்களை வாங்குவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். வாழ்க்கையில் புதிய முன்னேற்றம் ஏற்படும். உடல் ஆரோக்கியம் அடையும். மனதில் மகிழ்ச்சி உண்டாகும்படியான நிகழ்ச்சிகள் நடக்கும்.
தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். முன்னேற்றம் காணப்படும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடும். தொழில் விரிவாக்கத்திற்கான பண உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஏதாவது ஒரு வகையில் அலைச்சல், கூடுதல் செலவை சந்திப்பார்கள். வேறு ஒருவர் செய்த செயலுக்கு வீண் பழி ஏற்க வேண்டி இருக்கும். எனவே கவனம் தேவை. பெண்களுக்கு அடுத்தவர் ஆச்சரியபடும் வகையில் சாமர்த்தியமாக காரியங்களை செய்து வெற்றி பெறுவார்கள். புதிய நட்பு மூலம் மகிழ்ச்சி கிடைக்கும்.
கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெற்று புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். இதுவரை வராமல் தடைப்பட்ட பணத்தொகை கைக்கு வந்துசேரும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லக்கூடிய வாய்ப்புகளும் அதன்மூலம் மேன்மைகளும் உண்டாகும். உடனிருக்கும் சக கலைஞர்களின் ஒத்துழைப்பும் மகிழ்ச்சியளிக்கும்.
அரசியல்வாதிகளுக்கு செல்வம், செல்வாக்கு, பெயர், புகழ் உயரக்கூடிய காலம் என்றாலும் கட்சிப்பணிகளுக்காக நிறைய செலவுசெய்ய நேரிடும். வெளியூர், வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வீர்கள். உடனிருப்பவர்களால் சில பிரச்சினைகளைச் சந்திக்கக்கூடும் என்பதால் எதிலும் கவனம் தேவை.
மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காணப்படும். பாடங்கள் படிப்பது பற்றிய கவலை நீங்கும். புதிய நட்பால் மகிழ்ச்சி அடைவீர்கள்.
கார்த்திகை 2, 3, 4 பாதம்:
இந்த மாதம் சிலருக்கு இடமாற்றம் சம்பந்தப்பட்ட ஆலோசனைகள் நடக்கும். உடன்பணிபுரிவோரால் அனுகூலம் உண்டு. உங்கள் பொறுப்புகளை வேறு நபரிடம் ஒப்படைக்க வேண்டாம். வியாபாரத்தில் சீரான வளர்ச்சி இருக்கும். அலைச்சல் இருக்கும். தொழில் நிமித்தமாக சிலர் குடும்பத்தை விட்டு பிரிய நேரிடலாம். கூட்டு வியாபாரத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது.
ரோகிணி:
இந்த மாதம் எதிலும் முதலீடு செய்வதற்கு முன் குடும்ப உறுப்பினர்களுடன் ஆலோசனை செய்து கொள்ளவும்.இருப்பதைக் கொண்டு சிறப்பாக வாழ்ந்திட முயற்சியுங்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நீண்டதூர தகவல்கள் சாதகமானதாக இருக்கும். உறவினர்கள் மத்தியில் உங்கள் மதிப்பு உயரும். கலைத்துறையினருக்கு தீவிர முயற்சிகளின் பேரில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
மிருக சிரீஷம் 1, 2, பாதம்:
இந்த மாதம் உங்கள் திறமைக்கு ஏற்ற புகழ் பாராட்டு கிடைக்காமல் போகலாம். அரசியல்வாதிகள், சமூக சேவகர்கள் பிரதிபலனை எதிர்பார்க்காமல் உழைக்க வேண்டியிருக்கும். மாணவர்கள் அதிக சிரத்தை எடுத்து படிப்பது நல்லது. இடம் விட்டு இடம் பெயரும் சூழ்நிலை உருவாகும். உங்களின் தரத்தை விட தீயோரோடு சகவாசத்தை குறைக்க வேண்டும்.
பரிகாரம்: மகா லட்சுமியை வழிபட்டு வாருங்கள் வாழ்க்கையில் சுபிட்சம் உண்டாகும். அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வெள்ளி சந்திராஷ்டம தினங்கள்: ஏப்ரல்: 24, 25 அதிர்ஷ்ட தினங்கள்: ஏப்ரல்: 17, 18, 19
மிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்)
வீண் வாக்கு வாதங்களை தவிர்த்து விடும் மிதுன ராசி அன்பர்களே இந்த மாதம் எடுத்த முயற்சிகள் கை கூடும். வரவுக் கேற்ற செலவு ஏற்படும். எதையும் சாதிக்கும் திறமையும், சாமர்த்தியமும் உண்டாகும். மனோ தைரியம் கூடும். மற்றவர்களால் குற்றம் சாட்டப்படலாம். எனவே கவனம் தேவை. கண்நோய், பித்தம், வாதம் சம்பந்தப்பட்ட நோய் ஏற்பட்டு நீங்கும். வார்த்தைக்கு மதிப்பு இருக்கும். திடீர் கோபம் உண்டாகும்..
குடும்பத்தில் திருமணம் தொடர்பான காரியங்கள் சாதகமாக பலன் தரும். குடும்பத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் மறையும். உங்களது வார்த்தைக்கு மதிப்பு கூடும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மன கசப்பு நீங்கும். பிள்ளைகள் உங்களது பேச்சுக்கு செவி சாய்ப்பார்கள். வாய்க்கு ருசியான உணவும் கிடைக்கும்.
தொழில், வியாபாரம் மூலம் லாபம் அதிகம் வரும். வாக்குவன்மையால் தொழில், வியாபாரம் சிறப்பாக நடைபெறும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். கடன் வசதி கிடைக்கும்.
உத்தியோகம் காரணமாக வெளியில் தங்க நேரிடும். அலுவலகத்தில் அனுசரித்து செல்வது நல்லது.
பெண்களுக்கு வீண் அலைச்சலும் பயணங்களும் ஏற்படலாம். நேரம் தவறி உண்பதை தவிர்ப்பது நல்லது. சாமர்த்தியமான பேச்சு லாபம் தரும்.
கலைத்துறையினர் கிடைத்த வாய்ப்புக்களை நழுவவிடாமல் பாதுகாத்துக்கொள்வது உத்தமம். புதிய வாய்ப்புகள் கிடைப்பதில் சிக்கல்கள் உண்டாகும். நெருக்கடியான சூழ்நிலைகளால் உடல்நிலை பாதிப்புகள் ஏற்பட்டு மனஅமைதி குறையும். உடன் இருப்பவர்களாலே வீண் பிரச்சினைகளைச் சந்திப்பீர்கள். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும்.
அரசியலில் மற்றும் பொதுப்பணிகளில் ஈடுபட்டிருப்போருக்கு தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ள முடியாத சூழ்நிலைகள் உண்டாகும். முடிந்தவரை மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவது நல்லது. எடுக்கும் காரியங்களில் தடைகளுக்குப் பின்பே வெற்றி பெறமுடியும். பொருளாதாரநிலை ஏற்ற இறக்கமாக இருக்கும்.
மாணவர்களுக்கு படிப்பில் முன்னேற்றம் காணப்படும். கல்வியில் வெற்றி பெற தேவையான உதவிகள் கிடைக்கும். உற்சாகமாக காணப்படுவீர்கள்.
மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள்:
இந்த மாதம் தெய்வ அனுகூலத்தால் முன்னேற்றம் வந்து சேரும். உறவினர்கள் வகையில் வீண்மனக்கசப்பு வரலாம். வெளியூர் பயணம் ஏற்படும். அதீத உழைப்பின் மூலமே அனைத்து நற்பலன்களையும் பெற முடியும். இருந்து வந்த தடைகள் அகலும். உங்கள் முயற்சிகளில் வெற்றியும், பொருளாதார வளமும் பெருகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
திருவாதிரை:
இந்த மாதம் உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் பெருகும். உறவினர்கள் வகையில் நிலவி வந்த பிரச்சனைகள் அனைத்தும் அடியோடு மறையும். சுபநிகழ்ச்சிகள் நடக்கும். பெண்களால் அனுகூலம் கிடைக்கும். மிகவும் உதவிகரமாக இருப்பர். குழந்தை பாக்கியம் கிடைக்கும். வீடு மனை வாங்கும் யோகம் சிலருக்கு கூடி வரும்.
புனர்பூசம் 1, 2, 3 பாதம்:
இந்த மாதம் புதிய சொத்துக்கள் வாங்க நேரம் கைகூடி வரும். வழக்கு விவகாரங்கள் சாதகமாக இருக்கும். ஆனால் அதற்காக சிலர் கடன் வாங்க வேண்டி வரலாம். உடல் நலம் சீராக இருக்கும். பித்தம், மயக்கம் தொடர்பான உபாதைகள் வரலாம். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு முன்னேற்றம் காண்பர். பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை தங்கு தடையின்றி கிடைக்கும்.
பரிகாரம்: புதன் கிழமைகளில் பெருமாள் கோவிலுக்கு சென்று வர பொருளாதாரம் உயரும். அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், சனி சந்திராஷ்டம தினங்கள்: ஏப்ரல்: 26, 27, 28 அதிர்ஷ்ட தினங்கள்: ஏப்ரல்: 20, 21.
கடகம் (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)
புதுமையை அதிகம் விரும்பும் கடக ராசிக்காரர்களே, நீங்கள் புதுமை படைக்க எண்ணுபவர்கள். இந்த மாதம் பணவரத்து இருக்கும். எடுத்த முடிவை செயல்படுத்தும் முன் ஒரு முறைக்கு இருமுறை ஆலோசிப்பது நல்லது.
மனம் எந்த ஒரு காரியத்திலும் அவசர முடிவு எடுக்க தூண்டும். வீண் வாக்குவாதங்களால் பகையை வளர்த்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. வீண் அலைச்சலுக்கு பிறகே எந்த ஒரு காரியமும் நடந்து முடியும்.
குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே திடீர் பூசல்கள் ஏற்பட்டு சரியாகும். குடும்பச் செலவுகள் கூடும். குடும்பம் பற்றிய கவலைகள் உண்டாகும். உறவினர்கள், நண்பர்களிடம் பேசும்போது நிதானமாக பேசுவது நன்மை தரும். நெருப்பு ஆயுதங்களை பயன்படுத்தும் போது மிகவும் எச்சரிக்கை தேவை.
தொழில், வியாபாரம் தொடர்பான பேச்சுவார்த்தைகளின் போது மிகவும் நிதானமாக பேசுவது நன்மை தரும். எதிர்பார்த்த பணம் தாமதப்படும். புதிய ஆர்டர்கள் கிடைக்க அலைய வேண்டி இருக்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக செயல்பட்டு பாராட்டு பெறுவார்கள். நினைத்த காரியத்தை நினைத்தபடி நடத்தி முடிக்க முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.
பெண்களுக்கு புதிய தொடர்புகள் மூலம் லாபம் உண்டாகும். மனம் மகிழும்படியான நிகழ்ச்சிகள் நடக்கும்.
கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தேடிவந்து கதவைத்தட்டும். தடைப்பட்ட பணவரவுகள் யாவும் தடையின்றிக் கிடைக்கும். தொழிலில் இருந்த போட்டி பொறாமைகள் விலகி உடனிருக்கும் கலைஞர்களின் ஒத்துழைப்புக் கிடைக்கும். நீங்கள் நடித்து வெளிவந்த படங்களும் வெற்றியடைவதால் ரசிகர்களின் ஆதரவு அமோகமாக இருக்கும். வெளிநாடுகளுக்குச் செல்லக்கூடிய வாய்ப்பு அமையும்.
அரசியல்துறையினருக்கு உங்களின் பெயர், புகழ் யாவும் உயரக்கூடிய காலமாகும். எதிர்பார்த்த கௌரவப் பதவிகள்கூட கிடைக்கும். பெரிய மனிதர்களின் தொடர்பும் தொண்டர்களின் ஆதரவும் சிறப்பாக அமையும். வெளியூர், வெளிநாட்டுக்குச் செல்லக்கூடிய வாய்ப்புகள் அமையும். மறைமுக வருவாய்கள் அதிகரிக்கும்.
மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற கூடுதல் கவனம் செலுத்தி படிப்பது நல்லது. வீண் அலைச்சல் உண்டாகும். சகமாணவர்களிடம் கவனமாக பேசுவது நல்லது.
புனர் பூசம் 4ம் பாதம்:
இந்த மாதம் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவுடன் இருப்பர். வேலையின்றி இருப்பவர்கள் வேலை கிடைக்கப் பெறலாம். வியாபாரிகளுக்கு தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். அலைச்சல் இருக்கும். ஆனால் கடந்த காலத்தை விட கூடுதல் வருவாயைப் பெறலாம். புதிய வியாபாரம் தொடங்குவதற்கு முன் ஒன்றுக்கு மேற்பட்டவர்களிடம் ஆலோசனை செய்யவும்.
பூசம்:
இந்த மாதம் இருப்பதை சிறப்பாக நடத்துவதற்கு முயற்சி செய்யவும். அறிவைப் பயன்படுத்தி ஏற்றம் காணலாம். பெண்கள் உற்சாகமாக காணப்படுவர். கணவர் மற்றும் அண்டை அயலாரின் அன்பும் பாசமும் கிடைக்கும். பிள்ளை வளர்ப்பில் பெருமை அடைவீர்கள். கலைஞர்கள், புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவர். புகழ் பாராட்டு கிடைக்கும்.
ஆயில்யம்:
இந்த மாதம் மாணவர்கள் தொடர்ந்து சிறப்பான நிலையில் இருப்பர். நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். பலருக்கு வெற்றி நிச்சயம். பொதுநல சேவகர்கள் நல்ல முன்னேற்றம் காண்பர். அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பதவியை அடையலாம். இறுக்கமான சூழ்நிலையிலும் சில நல்ல முன்னேற்றங்களைப் பெற போகிறீர்கள். வாகன மூலம் லாபம் வரும். மற்றவர்கள் பிரச்சனைகளில் வாதாடி வெற்றி பெறுவீர்கள்.
பரிகாரம்: ஸ்ரீ ராகவேந்திரரை பூஜை செய்யுங்கள். கவலைகள் நீங்கும். அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி சந்திராஷ்டம தினங்கள்: ஏப்ரல்: 29, 30 அதிர்ஷ்ட தினங்கள்: ஏப்ரல்: 22, 23.
சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)
குழந்தை மனம் உடைய சிம்மராசியினரே, இந்த மாதம் சில எதிர்பார்த்த நல்ல தகவல்கள் வந்து சேரும். ஒரு சில காரியங்களில் அவசரமாக முடிவு எடுப்பதை தவிர்ப்பது நன்மை தரும். முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர் மூலம் உதவியும் கிடைக்கும். வெளியூர் பயணம் செல்ல நேரிடலாம்.
குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே வீண் மன வருத்தம் ஏற்பட்டு நீங்கும். அக்கம் பக்கத்தினருடன் அனுசரித்து செல்வதன் மூலம் நன்மை உண்டாகும். உறவினர்களிடம் பேசும் போதும் அவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லும் போதும் நிதானமாக இருப்பது நல்லது. உங்களது பொருட்களை பத்திரமாக வைத்துக் கொள்வது நல்லது.
தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் தங்கள் வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டி இருக்கும். வரவேண்டிய பாக்கிகள் தாமதமாக வந்து சேரும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரி சொல்லிய ஒரு வேலையை முடிக்க அலைந்து திரிய வேண்டி இருக்கும். சக பணியாளர்களிடம் வீண் பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது.
பெண்களுக்கு முன் பின் யோசிக்காமல் பேசுவதை தவிர்ப்பது நல்லது. செலவு கூடும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.
கலைத்துறையினருக்கு தொழில்ரீதியாக போட்டிகள் ஏற்பட்டாலும் புதிய வாய்ப்புகளுக்கு பஞ்சம் இருக்காது. வரவேண்டிய பணப்பாக்கிகள் மட்டும் இழுபறி நிலையிலேயே இருந்து வரும். இடைவிடாத உழைப்பால் உடல்நிலையில் சோர்வு உண்டாகும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல்கள் ஏற்படக்கூடும் என்பதால் முடிந்தவரைத் தவிர்த்துவிடுவது நல்லது.
அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த கௌரவமான பதவிகள் கிடைக்கும். தொண்டர்கள் மற்றும் மக்களின் ஆதரவுகள் சிறப்பாக அமைந்து மனமகிழ்ச்சியை ஏற்படுத்தும். எடுக்கும் காரியங்களை சிறப்பாகச் செய்து முடித்து மக்களின் ஆதரவைப் பெறுவீர்கள்.
மாணவர்கள் எந்த வேலை செய்தாலும் கவனமாக செய்வது நல்லது. பாடம் தொடர்பான சந்தேகங்களை உடனுக்குடன் கேட்டு படிப்பது நல்லது.
மகம்:
இந்த மாதம் எதிர்பாராத செலவினங்கள் இருந்தாலும் நல்ல பணப்புழக்கமும், பொருளாதார ஏற்றமும் இருக்கும். பிள்ளைகளால் அனுகூலம் ஏற்படும். எந்த பிரச்சனையையும் சந்தித்து முறியடிக்கும் வல்லமையைப் பெறலாம். காரியத்தடைகள் நீங்கி அனுகூலம் பிறக்கும். மதிப்பு மரியாதை சுமாராகவே இருக்கும். வீண் வாதங்களைத் தவிர்க்கவும். பணவரத்து அதிகரிக்கும். பயணம் மூலம் லாபம் கிடைக்க பெறுவீர்கள்.
பூரம்:
இந்த மாதம் குடும்பத்தின் தேவைகள் பூர்த்தியாகும். புதிய வீடு வாங்க வாய்ப்பு உண்டு. குழந்தை பாக்கியம் கிடைக்கும். கணவன் மனைவி இடையே அன்பு நீடிக்கும் சிற்சில பிரச்சனைகள் வரத்தான் செய்யும். எனவே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போகவும். அதே போல் உறவினர் வகையிலும் அதிக நெருக்கம் வேண்டாம். புதிய நபர்கள் நட்பு உண்டாகும்.
உத்திரம் 1ம் பாதம்:
இந்த மாதம் சிலர் தொழில் நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரிய நேரிடலாம். தூரத்தில் இருக்கும் உறவினரால் நன்மை ஏற்படும். உடல்நலத்தைப் பொறுத்தவரையில் பித்தம் மயக்கம் தொடர்பான பிரச்சனைகள் வரலாம். மருத்துவச் செலவு வெகுவாகக் குறையும். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு வேலைப் பளு அதிகரிக்கும். விரும்பியது கிடைக்க கூடுதல் முயற்சி தேவை.
பரிகாரம்: சிவனுக்கு வில்வ அர்ச்சனை செய்து பூஜித்து வாருங்கள் பிரச்சினைகள் தீரும். அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, திங்கள் சந்திராஷ்டம தினங்கள்: மே: 1, 2, 3 அதிர்ஷ்ட தினங்கள்: ஏப்ரல்: 24, 25.
கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2, பாதங்கள்)
தீராத பிரச்சினைகளைக் கூட உங்கள் புத்திசாமர்த்தியத்தால் தீர்க்கும் குணமுடைய கன்னி ராசிக்காரர்ளே, இந்த மாதம் பொன், பொருள் சேரும். வாகன யோகம் உண்டாகும். விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்புகள் கிடைக்கும். புதிய தொடர்புகள் ஏற்படும். மனம் மகிழும்படியான சம்பவங்கள் நடக்கும். பயணங்கள் ஏற்படும்.
குடும்பத்தில் இருந்த இறுக்கமான சூழ்நிலை நீங்கும். குடும்ப உறுப்பினர்கள் மூலம் வருமானம் வரும். சொன்ன சொல்லை எப்பாடு பட்டாவது காப்பாற்றுவீர்கள். ஒரு சில பணி காரணமாக வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடலாம். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவது மூலமும் விருந்தினர் வருகையாலும் செலவு உண்டாகும்.
தொழில், வியாபாரத்தில் செலவுகள் அதிகரிக்கும். உங்கள் கீழ் வேலை செய்பவர்களின் செயல்களால் உங்களுக்கு கோபம் உண்டாகலாம். நிதானமாக அவர்களிடம் பேசுவது நன்மை தரும். பழைய பாக்கிகளை வசூலிப்பதில் வேகம் காட்டுவீர்கள். உத்தியோகம் தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். அலுவலகத்தில் உள்ள சக ஊழியர்கள், மேல் அதிகாரிகளிடம் வீண் பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பொறுப்பு கிடைக்கப்பெறுவார்கள். சக பணியாளர்கள் மூலம் நன்மை உண்டாகும். அலுவலகம் மூலம் வாகனம் கிடைக்கலாம். என்றோ செய்த ஒரு வேலைக்கு இப்போது பாராட்டு கிடைக்கலாம்.
பெண்களுக்கு சாதுரியமான பேச்சால் ஆதாயம் உண்டாகும். பணவரத்து கூடும். காரிய தடைகள் நீங்கும். உடனிருப்பவர்களை அனுசரித்துச்செல்வது, பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது.
கலைத்துறையினர் எதிர்பார்க்கும் வாய்ப்புகள் தடையின்றிக் கிட்டும். வரவேண்டிய பணத்தொகைகளும் எதிர்பார்த்தபடி வந்து சேரும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லக்கூடிய வாய்ப்புகளும் அதன்மூலம் அனுகூலமான பலன்களும் உண்டாகும். சக கலைஞர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். கடன்கள் குறையும்.
அரசியல்வாதிகள் போட்டி பொறாமைகளை எதிர்கொண்டாலும் மக்களின் ஆதரவைப் பெறமுடியும். கட்சிகளில் உட்பூசல்கள் ஏற்பட்டாலும் உங்களின் வார்த்தைகளுக்கு மதிப்பும் மரியாதையும் உயரும். நினைத்த காரியங்களை நிறைவேற்றிக்கொள்ள முடியும். எதிலும் சற்றுச் சிந்தித்துச் செயல்படுவது நல்லது.
மாணவர்களுக்கு ஆசிரியர்கள், சக மாணவர்கள் உதவிகள் கிடைக்கும். பாடங்களை நன்கு படிப்பது கூடுதல் மதிப்பெண் பெற உதவும்.
உத்திரம் 2, 3, 4 பாதம்:
இந்த மாதம் வருமானத்தில் எந்த குறையும் இருக்காது. உடன் பணிபுரிவோரிடம் அனுசரனையாக நடந்து கொள்ளவும். சிலர் எதிர்பாராத இடமாற்றத்தை சந்திக்கலாம். சொந்தத் தொழில் புரிவோர் சிறிது சிரத்தை எடுத்து உழைக்க வேண்டியிருக்கும். ஆனாலும் உழைப்புக்கேற்ற லாபம் கிடைக்கும். தொழில் நிமித்தமாக நீண்ட தூரம் பயணம் போக வேண்டி வரும்.
அஸ்தம்:
இந்த மாதம் எதிரிகள் வகையில் அசட்டையாக இருத்தல் கூடாது. புதிய முதலீடுகளின் போது ஆலோசனைகள் அவசியமாகிறது. பணவிஷயத்தில் தொடர்ந்து அக்கறை தேவை. எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. அடுத்தவர் கூறுவதை யோசித்து பார்த்து அதன் பிறகு அந்த காரியத்தில் ஈடுபடுவது நன்மை தரும். எல்லா நலன்களும் உண்டாகும்.
சித்திரை 1, 2, பாதம்:
இந்த மாதம் கலைத்துறையினருக்கு முயற்சிகளின் பேரில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். ஆனால் பொருளாதார ரீதியாக சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கும். அரசியல்வாதிகள், பொதுநல சேவை புரிவோருக்கு பண விஷயம் திருப்திகரமாக இருக்கும். ஆனால் எதிர்பார்த்த பதவி கிடைப்பதில் வாக்குவாதம் ஏற்படலாம். உடன்பிறந்த சகோதரர்கள் ஒன்றுசேர்வார்கள். மணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் வந்து சேரும்.
பரிகாரம்: துளசி செடி வைத்து பூஜை செய்யுங்கள் எல்லா நன்மைகளும் உண்டாகும். அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன் சந்திராஷ்டம தினங்கள்: மே: 4, 5 அதிர்ஷ்ட தினங்கள்: ஏப்ரல்: 26, 27, 28.
துலாம் (சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3 பாதங்கள்)
தனது முக வசீகரத்தால் அனைவரையும் கவர்ந்திழுக்கும் துலா ராசியினரே, இந்த மாதம் மனதில் போட்டு வைத்திருந்த காரியங்களை திட்டமிட்டபடி செய்து முடிப்பீர்கள். பணவரத்து தாமதப்பட்டாலும் கையில் இருப்பு இருக்கும். வேளை தவறி சாப்பிட வேண்டி இருக்கும்.
முக்கியமான பணிகள் தாமதமாக நடக்கும். வீண் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கி சென்று விடுவது நல்லது. மற்றவர்களுக்கு உதவும் போது கவனமாக இருப்பது நல்லது.
குடும்பத்தில் வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம். கவனமாக பேசுவது நல்லது. உறவினர்கள், குடும்ப நண்பர்களிடம் முக்கிய விஷயங்களை ஆலோசனை செய்வதையும், அடுத்தவர் பற்றி பேசுவதையும் தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்வது நல்லது. வாகன சுகம் ஏற்படும். வாகனத்தை ஓட்டும் போது கவனம் தேவை.
தொழில், வியாபாரம் தொடர்பான பயணங்கள் அதனால் அலைச்சல் ஏற்படலாம். வியாபார விரிவாக்கம் தொடர்பான பணிகளில் இடையூறுகள் ஏற்படலாம். பழைய பாக்கிகள் வசூலில் தாமதமான நிலை காணப்படும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் சாதுரியமான பேச்சால் மேல் அதிகாரிகளின் கட்டளைகளை நிறைவேற்றி பாராட்டு பெறுவார்கள். நீண்ட நாட்களாக நின்ற பதவி உயர்வு உங்களை தேடி வரலாம்.
பெண்கள் வலிய சென்று உதவுவதன் மூலம் வீண் பழி ஏற்படலாம். கவனம் தேவை. கோபத்தை தவிர்ப்பது நல்லது.
கலைத்துறையினருக்கு வரவேண்டிய படவாய்ப்புகள் தட்டிச்செல்லும். தனவரவில் தடைகள் உண்டாகி கடும் சோதனைகள் ஏற்படும். சம்பள பாக்கிகளும் இழுபறி நிலையில் இருக்கும். வெளியூர், வெளிநாடு செல்லக்கூடிய சூழ்நிலைகள் ஏற்பட்டாலும் அதன்மூலம் அனுகூலமான பலனை அடையமுடியாது. புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும்போது கவனம் தேவை.
அரசியல்வாதிகள் தங்கள் பதவிகளைக் காப்பாற்றிக்கொள்ள போராட வேண்டிய காலமாகும். புகழ், பெருமை யாவும் மங்கும். உடனிருப்பவர்களே துரோகிகளாக மாறுவார்கள். மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றினால் மட்டுமே மக்களின் ஆதரவைப் பெறமுடியும். மேடைப் பேச்சுகளில் சற்று கவனமுடன் செயல்படுவது மிகவும் உத்தமம்.
மாணவர்களுக்கு பாடங்களை படிக்கும் போது மனதை ஒரு முகப்படுத்தி படிப்பது நல்லது. கவனம் சிதற விடாமல் இருப்பது வெற்றிக்கு உதவும்.
சித்திரை 3, 4 பாதம்:
இந்த மாதம் மாணவர்கள் படிப்பில் தீவிர அக்கறை எடுக்க வேண்டும். குடும்ப ஒற்றுமைக்காக விட்டுக் கொடுத்து போக வேண்டியிருக்கும். மனதில் பட்டதை பளிச்சென்று சொல்வீர்கள். இதுவரை இருந்து வந்த பலவிதமான பிரச்சனைகளிலிருந்து விடுபடுவீர்கள். பின்தங்கிய நிலையிருப்பவர்கள் முன்னேற்றப் பாதையில் செல்வார்கள். தாயின் உடல்நலத்தில் கவனம் தேவை.
சுவாதி:
இந்த மாதம் உங்களுடைய உடல்நலத்தை பொறுத்தவரை உஷ்ணம் மற்றும் தோல் சம்பந்தப்பட்ட உபாதைகள் வரலாம். சிலருக்கு ஊர் விட்டு ஊர் செல்லும் நிலை ஏற்படலாம். நல்ல பணப்புழக்கம் இருக்கும். எடுத்த காரியம் அனுகூலத்தைக் கொடுக்கும். மதிப்பு மரியாதை சீராக இருக்கும். வீன்விவாதங்களைத் தவிர்க்கவும். பிள்ளைகள் பாராட்டைப் பெற்று பெற்றோர்களுக்கு மகிழ்ச்சி தருவார்கள்.
விசாகம் 1, 2, 3ம் பாதம்:
இந்த மாதம் குடும்பத்தில் தம்பதிகளிடையே இடையே இருந்து வந்த பிரச்சனைகள் சுமூகமாக மறையும். பிரிந்திருந்த குடும்பம் ஒன்று சேரும். முயற்சிகளின் பேரில் சுபகாரியங்கள் தங்கு தடையின்றி நடைபெறும். குழந்தை பாக்கியம் கிட்டும். வீட்டிற்குத் தேவையான அனைத்து வசதிகளும் கிடைக்கும். புதிய வீடு, மனை ஆகியவற்றை வாங்கும் போது கவனம் தேவை.
பரிகாரம்: வெள்ளிக்கிழமைகளில் லலிதாம்பிகையை அர்ச்சனை செய்து வழிபட எல்லா நன்மைகளும் உண்டாகும். செல்வம் சேரும். செல்வாக்கு உயரும். அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி சந்திராஷ்டம தினங்கள்: மே: 6, 7 அதிர்ஷ்ட தினங்கள்: ஏப்ரல்: 29, 30.
விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)
கோபமிருந்தாலும் விட்டுக் கொடுக்கும் மனப் பான்மையுடைய விருச்சிக ராசிக்காரர்களே, இந்த மாதம் பணவரத்து கூடும். வாக்கு வன்மையால் லாபம் உண்டாகும். வீண் பயணங்களும் அலைச்சலும் உண்டாகும். இடமாற்றம் ஏற்படலாம். கெட்ட கனவுகள் தோன்றும். உஷ்ணம் சம்பந்தமான நோய்கள் வந்து நீங்கும். நேரம் தவறி உண்பதை தவிர்ப்பது நல்லது.
குடும்பத்தில் விருந்தினர் வருகையால் திடீர் செலவுகள் ஏற்படலாம். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள குடும்பத்தினருடன் வெளியிடங்களுக்கு செல்ல வேண்டி இருக்கலாம். வெளிவட்டார பழக்க வழக்கங்களை குறைத்துக் கொள்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே பழைய விஷயம் ஒன்றால் வாக்குவாதம் ஏற்பட்டு சரியாகும்.ஆயுதம், நெருப்பு இவற்றை கையாளும் போதும் வாகனங்களில் செல்லும் போதும் கவனம் தேவை.
தொழில், வியாபாரம் தொடர்பாக புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். அதனால் நன்மை உண்டாகும். உங்கள் கீழ் பணியாற்றுபவர்கள் சிறப்பாக பணிபுரிந்து உங்கள் நிலையை உயரச் செய்வார்கள்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் நன்மை தீமை பற்றிய கவலைபடாமல் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியை திறம்பட செய்வார்கள். போட்டிகள் மறையும்.
பெண்களுக்கு கடன் தொடர்பான பிரச்சனைகள் தீரும். பணவரத்து கூடும். மன குழப்பம் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும்.
கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் சற்று தாமதமாகக் கிடைத்தாலும் நல்ல வாய்ப்புகளாக அமையும். வெளியூர், வெளிநாட்டுப் பயணங்கள் உற்சாகத்தை ஏற்படுத்தினாலும் உடல்நலக் குறைவுகளையும் உண்டாக்கும்.
அரசியல்வாதிகளின் பேச்சுக்கு மதிப்பும், மரியாதையும் உயரும். முயற்சிகளில் எந்தவொரு தடையும் இல்லாமல் வெற்றிகளைப் பெறுவீர்கள். எதிர்பார்த்த தலைமைப் பதவிகளும் கிடைக்கும். புகழின் உச்சிக்கே செல்வீர்கள். உங்களின் செல்வம், செல்வாக்கு யாவும் உயரும். மக்களின் ஆதரவு பெருகும்.
மாணவர்களுக்கு படிப்பில் முன்னேற்றம் காணப்படும். விளையாட்டு மற்றும் பொழுது போக்குகளில் ஆர்வம் உண்டாகும்.
விசாகம் 4ம் பாதம்:
இந்த மாதம் ஒருமுறைக்கு இருமுறை விசாரித்து பொருட்களை வாங்குவது நல்லது. நண்பர்கள், உறவினர்கள் அன்னியோன்னியமாக இருப்பர். உத்தியோலத்தில் இருப்பவ்ர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். சற்று முயற்சி எடுத்தால் பதவி உயர்வு உங்களை வந்து சேரும். எதிர்பார்திருந்த பணி இடமாற்றம் உங்களை வந்து சேரும். மேலதிகாரிகளின் அனுசரனை இருந்துவரும்.
அனுஷம்:
இந்த மாதம் வியாபாரிகள் சிறப்பான முன்னேற்றத்தைப் பெறலாம். லாபம் அதிகரிக்கும். உங்கள் வியாபாரத்தை விரிவாக்கம் செய்வீர்கள். எதிரிகளை உதிரிகளாக்குவீர்கள். புதியதாக ஆரம்பித்த தொழிலில் ஏற்றம் உண்டு. இரும்பு தொடர்பான தொழிலில் அதிக வருவாய் வந்து சேரும். கூட்டாளிகளிடையே ஒற்றுமை பலம் ஏற்படும்.
கேட்டை:
இந்த மாதம் எந்த ஒரு வேலையில் ஈடுபட்டாலும் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. அடுத்தவரை நம்பி பொறுப்புகளை ஒப்படைப்பதை தவிர்ப்பது நல்லது. கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் சற்று தாமதமாக வந்தாலும் முயற்சிகள் எடுக்க வேண்டியிருக்கும். பொருளாதாரம் எதிர்பார்த்தபடி இருக்காது. உடன் இருப்போரால் பிரச்சனைகள் வரலாம்.
பரிகாரம்: ஸ்ரீ மகாதேவரை பூஜை செய்து வர காரிய தடைகளை நீக்கும். எதிர்ப்புகள் நீங்கும். அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன் சந்திராஷ்டம தினங்கள்: மே: 8, 9, 10 அதிர்ஷ்ட தினங்கள்: மே: 1, 2, 3.
தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)
பெயர், புகழ், செல்வாக்கு என்றும் குறைவிராத தனுசு ராசியினரே, இந்த மாதம் வாழ்க்கை தரம் உயர எடுக்கும் முயற்சிகள் கை கூடும். நெருக்கமானவர்களுடன் மகிழ்ச்சியாக பொழுதை கழிப்பீர்கள். முன்பின் யோசிக்காமல் எதையாவது பேசி விடுவீர்கள். இதனால் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படலாம் கவனம் தேவை. வழக்கத்தை விட செலவு கூடும்.
குடும்பத்தில் மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள் இருக்கும். குடும்ப சுகம் பூரணமாக கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே திருப்தியான நிலை காணப்படும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். சுப காரியங்களில் குடும்பத்தினருடன் கலந்து கொள்வீர்கள். வாய்க்கு ருசியான இனிப்பு மற்றும் உணவு கிடைக்கும்.
தொழில், வியாபாரம் முன்னேற்றம் காணப்படும். தொழில் தொடர்பான காரியங்கள் வெற்றி பெறும். பொருளாதார முன்னேற்றம் உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலிப்பது வேகம் பிடிக்கும். வியாபாரம் தொடர்பான பிரச்சனைகளில் சாதகமான நிலையே உண்டாகும்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை சுமை அதிகரிப்பதுடன் அலைச்சலும் அதனால் சோர்வும் உண்டாகும்.
பெண்களுக்கு எதிர்பார்த்த தகவல்கள் தாமதமாக வரும். கூட இருப்பவர்களிடம் எந்த விஷயத்தையும் சொல்லும் போது கவனம் தேவை.
கலைத்துறையினர் எதிர்பார்க்கும் வாய்ப்புகள் வந்து சேரும். தொழிலில் போட்டிகள் அதிகரித்து உங்களுக்குக் கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை பிற கலைஞர்கள் தட்டிச் செல்வார்கள். வரவேண்டிய பணத்தொகையும் தாமதப்படும். புதிய வாய்ப்புகள் தடைப்படுவதால் கிடைக்கும் வாய்ப்புகளை தற்போது பயன்படுத்திக்கொண்டால் பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்கலாம்.
அரசியல்வாதிகள் மக்களின் ஆதரவைப்பெற அவர்களின் தேவை அறிந்து செயல்படுவது உத்தமம். அமைச்சர்களின் கெடுபிடிகள் அதிகரிப்பதால் கட்சி மாறக்கூடிய சூழ்நிலைகள் உண்டாகும். உடனிருப்பவர்கள் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். எந்தவொரு காரியத்திலும் வெற்றி கிட்டும்.
மாணவர்களுக்கு திறமையாக செயல்பட்டு கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள். கூடுதல் நேரம் படிக்க வேண்டி இருக்கும்.
மூலம்:
இந்த மாதம் அரசியல்வாதிகள் சீரான பலனை எதிர்பார்க்கலாம். மாணவமணிகள் சிரத்தை எடுத்து படிப்பர். உங்கள் முயற்சிக்கு தகுந்த பலன்கள் வந்தே தீரும். வழக்கு விவகாரங்கள் மேலும் தள்ளிப் போகும். தெய்வபக்தி அதிகரிக்கும். பயணங்கள் மகிழ்ச்சி தரும். மனதில் சுய நம்பிக்கை அதிகரிக்கும். இதுவரை தொல்லை கொடுத்துவந்த எதிரிகள் விலகிச் செல்வார்கள்.
பூராடம்:
இந்த மாதம் எதிலும் கவனமாக பேசுவது நல்லது. வீண் பழி உண்டாகலாம். குடும்பத்தில் இருப்பவர்களால் ஏதாவது மனம் நோகும்படியான நிலை உருவாகலாம். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். பிள்ளைகளின் கல்வியில் கவனம் தேவை. வெளிநாடு செல்லும் திட்டம் நிறைவேறும். கொடுக்கல்- வாங்கல் செய்வோர் எச்சரிக்கையாக இருக்கவேண்டிய நாள்.
உத்திராடம் 1ம் பாதம்:
இந்த மாதம் கெட்டகனவுகள் தோன்றும். நெருக்கடியான நேரத்தில் உறவினர்கள், நண்பர்கள் உங்களை விட்டு விலகி செல்லலாம். மனதில் நிலையான எண்ணம் இருக்காது. பணநெருக்கடி குறையும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத சிக்கலை சந்திக்க வேண்டி இருக்கலாம். வீண் பகைகள் ஏற்பட்டு விலகும். எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் பாராட்டுக்கு பதில் விமர்சனம் கிடைக்கும்.
பரிகாரம்: வியாழக்கிழமையில் மஞ்சள் நிற பூ கொண்டு சிவனை வழிபடவும். அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், சனி சந்திராஷ்டம தினங்கள்: ஏப்ரல்: 14 மே: 11, 12 அதிர்ஷ்ட தினங்கள்: மே: 4, 5.
மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதங்கள் திருவோணம் அவிட்டம் 1,2 பாதங்கள்)
சோதனைகளை தகர்த்தெறியும் திறன் கொண்ட மகர ராசிக்காரர்களே இந்த மாதம் எதிலும் நிதானமாக இருப்பது நன்மை தரும். பணவரத்து உண்டாகும். வேற்று மொழி பேசும் நபரால் நன்மை உண்டாகும்.
புத்தி சாதுரியத்தால் எதையும் சமாளிப்பீர்கள். வீண் அலைச்சல் ஏற்படும். நீங்கள் நினைப்பது படி மற்றவர்கள் நடந்து கொள்ளாததால் டென்ஷன் ஏற்படலாம்.
குடும்பத்தில் பிள்ளைகளால் பெருமை உண்டாகும். அவர்களின் நலனுக்காக பாடுபடுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். சகோதரர்கள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். மனதில் துணிச்சல் ஏற்படும். கடன்கள் கட்டுக்குள் இருக்கும்.
தொழிலில் புதிய ஆர்டர் விஷயமாக வெளியூர் செல்ல நேரிடும். பழைய பாக்கிகள் வசூலிப்பதில் வேகம் காண்பீர்கள். புதிய கிளைகள் தொடங்க நினைப்பவர்கள் அதற்கான முயற்சியை தள்ளி போடுவது நல்லது.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி கிடைக்கும். அந்தஸ்து உயரும். நிலுவையில் இருந்த பணம் வந்து சேரும்.
பெண்களுக்கு முக்கியமான வேலைகளில் தாமதம் உண்டாகும். வீண் பிரச்சனைகளை கண்டால் ஒதுங்கி சென்று விடுவது நல்லது.
கலைஞர்கள் கையிலிருக்கும் வாய்ப்புக்களை நழுவவிடாமல் பார்த்துக்கொள்வது நல்லது. தொழிலில் போட்டி பொறாமைகள் அதிகரிக்கும். வரவேண்டிய சம்பள பாக்கிகள் கிடைக்காமல் இழுபறி நிலையில் இருக்கும். பொருளாதாரநிலையிலும் தடைகள் உண்டாகும். தேவையற்ற இடமாற்றங்களால் உடல்நிலை பாதிப்படையும். சேமிப்புக் குறையும்.
அரசியல்வாதிகள் மக்களின் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்தால் மட்டுமே மக்களின் ஆதரவைப் பெறுவீர்கள். பேச்சில் சற்று நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் தடைகள் நிலவும் என்பதாலும் எதையும் முழுமையாக முடிக்க முடியாத சூழ்நிலைகளும் உண்டாகும்.
மாணவர்களுக்கு: வீண் அலைச்சலை தவிர்ப்பதும், பாடங்களில் சந்தேகம் நீங்கி படிப்பதும் முன்னேற்றத்திற்கு உதவும்.
உத்திராடம் 2, 3, 4 பாதம்:
இந்த மாதம் ஆர்டர்கள் மற்றும் பொருட்கள் சப்ளை செய்வதில் கவனம் தேவை. பணவரத்து தாமதப்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணி சுமையை ஏற்க வேண்டி இருக்கும். முக்கிய பொறுப்பு கிடைக்கலாம். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கலாம். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பிடிவாதத்தை தவிர்ப்பது நன்மை தரும்.
திருவோணம்:
இந்த மாதம் பெண்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். பயணங்கள் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். எச்சரிக்கையாக பேசுவது நல்லது. கலைத்துறையினருக்கு மனத்துணிவு அதிகரிக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி திருப்திகரமாக இருக்கும். காரிய வெற்றிக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். எதிர்பார்த்த உதவியும் கிடைக்கும். மன சஞ்சலம் ஏற்படுத்தும். திடீர் கோபம் ஏற்படும். வீண் செலவும் இருக்கும்.
அவிட்டம் 1,2 பாதம்:
இந்த மாதம் அரசியலில் இருப்பவர்களுக்கு இடமாற்றம், பதவி இறக்கம் ஆகியவற்றை சந்திக்க வேண்டி இருக்கும். இருப்பினும் நற்பெயர் கிடைக்கும்.
மாணவர்களுக்கு கல்விக்காக செலவு உண்டாகும். கல்வியில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை அதிகரிக்கும். உடல்நிலையைப் பொறுத்தவரை மருத்துவ செலவு உண்டாகலாம். வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் வரலாம்.
பரிகாரம்: சனிக்கிழமையில் விநாயகரை வழிபடுவது கஷ்டங்களை போக்கும். மனதில் தைரியம் உண்டாகும். அதிர்ஷ்ட கிழமைகள்: வெள்ளி, சனி சந்திராஷ்டம தினங்கள்: ஏப்ரல்: 15, 16; மே: 13, 14 அதிர்ஷ்ட தினங்கள்: மே: 6, 7.
கும்பம் (அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்)
மனம் மகிழும்படியான சம்பவங்களை எதிர் நோக்கி காத்திருக்கும் கும்ப ராசிக்காரர்களே, இந்த மாதம் பல வழியிலும் பணவரத்து இருக்கும். காரியத் தடைகள் நீங்கும். மற்றவர்களின் மீது இரக்கம் ஏற்பட்டு உதவிகள் செய்வீர்கள். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். பெரியோர்கள் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். பெரும் புள்ளிகளின் அறிமுகம் கிடைக்கும்.
குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே திடீர் வாக்குவாதம் ஏற்படும். கவனமாக பேசுவதன் மூலம் நெருக்கம் அதிகரிக்கும். விருந்தினர் வருகை குடும்பத்தினரின் ஆரோக்கிய குறைவு ஆகியவற்றால் செலவு அதிகரிக்கும். சில்லறை சண்டைகள் அக்கம் பக்கத்தினருடன் உண்டாகலாம். கவனமாக இருப்பது நல்லது.
தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் கடின உழைப்புக்குபின் முனனேற்றம் அடைவார்கள். எதிர்பார்த்த ஆர்டர் வந்து சேரும். வாடிக்கையாளர்களை திருப்தி செய்ய கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.
உத்யோகஸ்தர்களுக்கு தனக்கென்று தனி வழி வைத்துக் கொண்டு தனித்தனைமையுடன் செயல்படும் திறமை உண்டாகும். வெளியூர் பயணங்கள் வெற்றியைக் கொடுக்கும்.
பெண்களுக்கு எந்த காரியத்திலும் அவசர முடிவு எடுக்காமல் இருப்பதும் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பதும் நல்லது.
கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் தேடிவரும். உங்கள் திறமைகளை வெளிப்படுத்தக்கூடிய அளவிற்கு கதாபாத்திரங்கள் அமையும். தடைப்பட்ட சம்பள பாக்கிகளும் கைக்குக் கிடைக்கப்பெறும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லக்கூடிய வாய்ப்புகளும் அதன்மூலம் சாதகமான பலன்களையும் பெறுவீர்கள்.
அரசியல்துறையினருக்கு உங்களின் செல்வம், செல்வாக்கு உயரக்கூடிய காலமாகும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லக்கூடிய வாய்ப்பு உண்டாகும். கௌரவமிக்க பதவிகள் கிடைக்கும். மக்களின் ஆதரவுகள் அதிகரிப்பதால் நினைத்த காரியங்கள் நிறைவேறும். முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். கொடுத்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றமுடியும்.
மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்களில் சாதகமான நிலை காணப்படும். திறமையாக செயல்பட்டு பாராட்டு பெறுவீர்கள்.
அவிட்டம் 3, 4 பாதம்:
இந்த மாதம் காரிய தடை ஏற்படலாம். மனதில் ஏதாவது குழப்பம் ஏற்பட்டு நீங்கும். சாமர்த்தியமான பேச்சு கை கொடுக்கும். பணவரத்து திருப்தியாக இருக்கும். நீண்ட நாட்களாக இழுத்து வந்த வீண் பிரச்சனைகள் நீங்கும். மரியாதை அந்தஸ்து உயரும். வெளிநாட்டு பயணங்கள் கைகூடும். எதிர்பார்த்த காரியம் வெற்றிகரமாக நடந்து முடியும். சக ஊழியர்களுடன் கடுமையாக பேசாமல் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.
சதயம்:
இந்த மாதம் குடும்பத்தில் மகிழ்ச்சி காணப்படும். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு உயரும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் சந்தோஷம் உண்டாகும். பணவரத்து இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.
பூரட்டாதி 1, 2, 3 பாதம்:
இந்த மாதம் தொழில் வியாபார சிக்கல்கள் நீங்கி நன்கு நடைபெறும். கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். தொழில் வியாபாரம் விரிவாக்கம் செய்ய முயற்சி மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். கணவன், மனைவிக்குள் திடீர் மன வருத்தம் ஏற்பட்டு நீங்கும். அக்கம் பக்கத்தினருடன் அனுசரித்து செல்வது நல்லது.
பரிகாரம்: அமாவாசையில் முன்னோர்கள் வழிபாடு செய்வது உகந்தது. அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, சனி சந்திராஷ்டம தினங்கள்: ஏப்ரல்: 17, 18, 19 அதிர்ஷ்ட தினங்கள்: மே: 8, 9, 10.
மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
பணவரவை அதிகம் பார்க்கப் போகும் மீன ராசியினரே, இந்த மாதம் கடன் தொடர்பான பிரச்சனைகள் தீரும். பல வகையான யோகங்கள் ஏற்படும். உடல் நோய்கள் நீங்கி ஆரோக்கியம் உண்டாகும். மன குழப்பம் நீங்கும். ஆனால் பிறருடன் பழகும் போது நிதானம் தேவை.
குடும்பத்தில் உள்ளவர்களால் வருமானம் கிடைக்கலாம். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் குடும்ப முன்னேற்றமடைய உதவும். பிள்ளைகளின் நலனின் அக்கறை காட்டுவீர்கள்.திருமணம் தொடர்பான பேச்சுவார்த்தை சாதகமாக முடியும்.
தொழில், வியாபாரம் போட்டிகள் நீங்கி நன்கு நடக்கும். உங்களது வியாபாரத்திற்கு பக்கபலமாக ஒருவரது உதவி கிடைக்கும். முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக வேலையாக முக்கிய நபர்களை சந்திக்க வேண்டி இருக்கும். கொடுத்த கடனை திருப்பி வாங்க முயல்வீர்கள்.
பெண்களுக்கு திடீர் கோபங்கள் உண்டாகலாம். நிதானமாக இருப்பது நல்லது. புத்திசாதுரியத்தால் எதையும் சமாளிப்பீர்கள்.
கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தேடிவந்து கதவைத் தட்டும். உங்களை வேண்டாம் என புறக்கணித்தவர்களும் வாய்ப்புகளை வாரி வழங்குவார்கள். நீங்கள் நடித்த படங்களும் வசூலில் முதலிடம் வகிக்கும். போட்டி பொறாமைகள் விலகும். தடைப்பட்ட பணவரவுகளும் தடைகள் நீங்கி கிடைக்கப்பெறும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்புகளும் உண்டாகும்.
அரசியல்வாதிகளின் பெயர், புகழுக்கு களங்கங்கள் உண்டாகும். உடனிருப்பவர்களே வீண்பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. எதிர்பாராத பயணங்களால் அனுகூலம் ஏற்பட்டு மனநிம்மதி உண்டாகும். அலைச்சல்கள் அதிகரிக்கும்.
மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காணகூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.
பூரட்டாதி 4ம் பாதம்:
இந்த மாதம் சிலருக்கு புதிய பதவி கூடுதல் பொறுப்புகள் கிடைக்கலாம். கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். அலுவலகத்தில் அடுத்தவர்களால் திடீர் பிரச்சனை தலை தூக்கலாம். உங்களது கருத்துக்கு மாற்று கருத்து உண்டாகலாம். குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் உங்கள் கோபத்தை தூண்டலாம். மிகவும் கவனமாக பேசுவதும் வாக்குவாதத்தை தவிர்ப்பதும் நன்மை தரும்.
உத்திரட்டாதி:
இந்த மாதம் திறமையான பேச்சின் மூலம் சாதகமான பலன் கிடைக்கும். காரிய தடைகள் நீங்கும். மனதில் இருந்த சோர்வு நீங்கி உற்சாகம் உண்டாகும். எதிர்பார்த்த தகவல் சாதகமாக வரும். கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். பெண்களுக்கு மற்றவர்கள் செயல்களால் திடீர் கோபம் உண்டாகலாம். எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வீண் செலவை குறைப்பது நல்லது.
ரேவதி:
இந்த மாதம் புதிய ஆர்டர்களுக்கான முயற்சிகள் சாதகமான பலன் தரும். வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். அரசியலில் உள்ளவர்கள் கோபமாக பேசுவதை தவிர்ப்பது நல்லது. மேல்மட்டத்தில் உள்ளவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படலாம். கவனம் தேவை. வாடிக்கையாளர்களிடம் கோபமான வார்த்தைகளை பேசாமல் சாந்தமாக உரையாடுவது வியாபார விருத்திக்கு வழி செய்யும்.
பரிகாரம்: தினமும் விநாயகர் வழிபாடு செய்வது உத்தமம். அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன் சந்திராஷ்டம தினங்கள்: ஏப்ரல்: 20, 21 அதிர்ஷ்ட தினங்கள்: ஏப்ரல்: 14; மே: 11, 12.