2800 காலிப்பணியிடங்கள்…. மாதம் ரூ.30,000 சம்பளத்தில்….. இந்திய கடற்படையில் வேலை…..!!!

இந்திய கடற்படை  தற்போது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பைவெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள அக்னிவீரர் பணிக்காக 2800 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாகவும் இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, வயது மற்றும் ஊதியம் போன்ற தகவல்களை வெளியிட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

காலிப்பணியிடங்கள்:  2800 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

கல்வி தகுதி:  Chemistry/ Biology/ Computer Science பாடப்பிரிவில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

வயது வரம்பு:  விண்ணப்பதாரர்கள் 01.11.1999 முதல் 30.04.2005 ஆம் ஆண்டிற்குள் பிறந்தவராக இருக்க வேண்டும்.

சம்பளம் : தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 30,000 மாத ஊதியமாக வழங்கப்படும்

தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 12ம் வகுப்பில் இயற்பியல், கணிதம் மற்றும் வேதியியல்/ உயிரியல்/ கணினி அறிவியல் ஆகிய பாடத்தில் பெற்ற மதிப்பெண்களின் சதவீத அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 22

கூடுதல் விவரங்களுக்கு https://www.joinindiannavy.gov.in/en/page/instructions-for-written-examination.html