“3 வருட காதல்”…. திடீரென காதலனை பிரேக் அப் செய்த வலிமை பட நாயகி….. இணையத்தில் தீயாய் பரவும் செய்தி…..!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வருபவர்களில் ஒருவர்தான் நடிகை ஹிமா குரேஷி. இவர் ஃபிலிம்பேர் விருது உள்ளிட்ட பல பாராட்டுகளை வென்றவர். அண்மையில் வெளியான வலிமை திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். அதனால் தமிழ் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதற்கு முன்னதாக ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான காலா திரைப்படத்திலும் இவர் நடித்துள்ளார்.

இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான கேங்க்ஸ் ஆப் வசேபூர் என்ற திரைப்படத்தில் துணை நடிகையாக சினிமாவில் அறிமுகமானார். 35 வயதாகும் இவர், அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் டபுள் எக்ஸ் எல் என்ற திரைப்படத்தை முடாசர் அஜீஸ் என்பவருடன் இவர் இணைந்து தயாரித்து இருந்தார்.

கடந்த மூன்று வருடங்களாக இருவரும் காதலித்து வந்த நிலையில் தற்போது பிரேக்கப் செய்து பிரிந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இருவரும் காதலை முறித்துக் கொண்டாலும் தொடர்ந்து நண்பர்களாக இருக்க முடிவு செய்துள்ளதாகவும் ஒரு தகவல் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.