கும்கி பட நடிகை லட்சுமி மேனனா இது?…. ஆள் அடையாளம் தெரியாம இப்படி மாறிட்டாங்களே…. நீண்ட நாள் கழித்து வெளியான புகைப்படம்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக பலம் வந்தவர் தான் நடிகை லட்சுமி மேனன்.இவர் சுந்தரபாண்டியன் திரைப்படத்தின் மூலம் முதன்முறையாக நடிகையாக அறிமுகமானார். தனது 16 வயதில் நடிகையாக அறிமுகமான இவர் முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தார். அதன் மூலம் இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த நிலையில் கும்கி, குட்டி புலி மற்றும் பாண்டியநாடு உள்ளிட்ட பல படங்களில் நடித்து அசத்தினார்.

இதன் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது. மேலும் நான் சிகப்பு மனிதன், மஞ்சப்பை,கொம்பன் மற்றும் வேதாளம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார். பின்னர் இவர் நடித்த மிருதன் மற்றும் ரெக்க போன்ற திரைப்படங்களில்மார்க்கெட் குறைய தொடங்கியதால் படிப்பில் கவனம் செலுத்த சினிமாவில் இருந்து விலகினார்.

அதே சமயம் இவர் உடல் எடையை ஏற்றியதும் சினிமாவிலிருந்து விலக முக்கிய காரணம் தான். சமீபகாலமாக சினிமாவில் தென்படாமல் இருக்கும் லட்சுமிமேனன் தற்போது மிக ஒல்லியாக ஆளை அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார்.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

M A R I A | PHOTOGRAPHER இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@tomariasfocus)

தற்போது அவர் 26 வயது இளம் நடிகை போல் கிளாமரில் டப் கொடுக்கும் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து உள்ள நிலையில் அது இணையத்தில் வைரலாகி வருகிறது.