36 ஆண்டுகளுக்கு முன்பு நடிகை குஷ்பு எப்படியிருந்தார் தெரியுமா ?? அவரே வெளியிட்ட புகைப்படத்தைப் பாருங்க !!

நடிகை குஷ்பூ சினிமாவில் ஒரு நேரத்தில் உச்சத்தில் இருந்தவர். ரஜினி, கமல், கார்த்திக், பிரபு, சத்யராஜ் என அத்தனை முக்கிய நடிகர்களுடன் ஜோடியாக நடித்தவர். அவருக்கு ரசிகர்கள் கோவில் கட்டிய நிகழ்வும் உண்டு. அவரின் ஸ்டைலை ஃபாபோவ் பண்ண பெண்களும் உண்டு. வயதாகிவிட்டாலும் தற்போது சின்னத்திரை சீரியலான லக்‌ஷ்மி ஸ்டோரில் நடித்து வருகிறார். இயக்குனர் சுந்தர்.சி ஐ திருமணம் முடித்து தன் இருமகள்களுடன் வாழ்ந்து வருகிறார். அதே வேளையில் அரசியலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.

1980ல் குழந்தை நட்சத்திரமாக தன்னுடைய திரைப்பயணத்தினை ஆரம்பித்த இவர், 1990ம் ஆண்டில் முன்னணி நாயகியாக வலம் வந்தார். தமிழ் தெலுங்கு என அனைத்து மொழி படங்களிலும் நடித்தது மட்டுமின்றி தற்போது அரசியல்வாதியாகவும் வலம் வருகிறார். பின்பு சினிமா இயக்குனரும், நடிகருமான சுந்தர் சி யைத் திருமணம் செய்தார். இவர்களுக்கு அவந்திகா, அனந்திகா என்று இரண்டு மகள்கள் இருக்கின்றனர். தற்போது தனது 36 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த புகைப்படத்தினை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார்.


மேலும் ‘காற்று போல உங்களுடைய அனைத்து கனவுகளும் நனவாக வேண்டும். நீங்கள் என்னவாக நினைக்கிறீர்களோ அதை நம்புங்கள் உங்களால் உருவாக்க முடியும். சாதிக்க முடியாது என்று இந்த உலகமே சொன்னாலும் அவர்கள் மத்தியில் நீங்கள் நினைப்பதை நிரூபித்துக் காட்டுங்கள் என்று பதிவிட்டிருந்தார்.இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் அட என்ன அழகு என கமண்டடித்து வருகின்றனர்.