விநாயகர் சதுர்த்தியை குடும்பத்துடன் கொண்டாடிய நடிகை ஜோதிகா…. இணையத்தில் வெளியான அழகிய குடும்ப புகைப்படம்…..!!!!

தமிழ் சினிமாவில் 90களில் இளைஞர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் தான் நடிகை ஜோதிகா. ஒரு காலகட்டத்தில் ரசிகர்கள் இவரை மிகப்பெரிய அளவில் கொண்டாடினர். முதல் முதலில் 1999 ஆம் ஆண்டு வெளியான வாலி என்ற திரைப்படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை தொடங்கினார். முதல் படமே நல்ல ஹிட் கொடுத்த நிலையில் இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன.

இதனால் திரை பயணத்தில் மிகப்பெரிய வெற்றியை கண்டால் ஜோதிகா. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். அவ்வகையில் குஷி, திருமலை, மொழி,சந்திரமுகி மற்றும் வேட்டையாடு விளையாடு உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்கள் இவரது திரைப்பயணத்தில் இருக்கின்றன.

இவர் நடித்துள்ள பெரும்பாலான படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இவர் சூர்யாவுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ள நிலையில் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்குப் பிறகு சினிமாவில் இருந்து விலகினார் நடிகை ஜோதிகா. அதன் பிறகு இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்த நிலையில் முழுக்க முழுக்க குடும்பத்தில் கவனம் செலுத்தி வந்த ஜோதிகா தனது பிள்ளைகள் ஓரளவு வளர்ந்த பிறகு மீண்டும் சினிமாவில் ரி என்ட்ரி கொடுத்தார்.

தற்போது நல்ல கதை அம்சம் கொண்ட திரைப்படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக ஜோதிகாவின் புகைப்படங்கள் அதாவது அவர் வெளியே வந்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் அதிக அளவு வலம் வந்து கொண்டிருக்கின்றன. அவ்வகையில் இப்போது அவரின் ஒரு புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. அதாவது அண்மையில் விநாயகர் சதுர்த்தியை தனது அம்மா அப்பா என குடும்பத்துடன் மகிழ்ச்சியாக கொண்டாடியுள்ளார் ஜோதிகா. அந்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.