கரூர் மாவட்டம் பஞ்சமாதேவியை அடுத்த சோமூரைச் சார்ந்த இளைஞர் விக்னேஷ்வரன் (வயது 25). சுமார் 4 அடி உயரம் மட்டுமே கொ ண்ட இவர் தன்னம்பிக்கையுடன் பி.சி.ஏ. பட்டப்படிப்பு படித்துவிட்டு வீட்டிலிருந்தபடியே ஓன்லைனில் பொருட்களை விற்பனை செய்யும் வேலையை செய்து வருகிறார்.

இவருக்கும் சிவகங்கையை சேர்ந்த பவித்ரா என்ற பெண்ணுக்கும் பேஸ்புக்கில் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் காதலாக மாற இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர், ஆனால் விக்னேஸ்வரன் குள்ளமாக இருக்கிறார் என கூறி பவித்ராவின் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் தங்கள் காதலில் உ றுதியாக இருந்த ஜோடி, விக்னேஸ்வரனின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் திருமணம் நடந்தது.

ஆனாலும் மனதால் இணைந்த காதல் ஜோடி எந்த காரணத்தை கொ ண் டு நம்மை பி ரிக்க நினைத்தாலும் அதற்கு நாம் இடம் கொ டுக் கக்கூடா து என்பதில் உ றுதியாக இருந்தனர். இதன் தொ டர்ச்சியாக பவித்ரா அதிரடி முடிவெ டுத்து பெற்றோர், உற்றார் உறவினரை உ தறி விட்டு வீட்டை விட்டு வெ ளியே றினார். இந்த சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் தீ யாய் பரவி வருகிறது