42மணி நேரமாக குழியில் சிக்கியிருக்கும் சுர்ஜித்…. தொடரும் மீட்பு பணிகள்

42மணி நேரத்தை கடந்து குழந்தை சுர்ஜித்தை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மணப்பாறை நெடுக்காட்டுப்பட்டியில், சுர்ஜித் என்ற 2வயது குழந்தை ஆழ்துளை கிணற்றி தவறி விழுந்ததை தொடர்ந்து மீட்கும் பணி நடைபெற்று வருகின்றது. தற்போது 110அடி ஆழத்தில் குழி தோண்டும் பணிகள் நடைபெற்று வருகின்றனர். இந்த பணிகள் துவங்கி இரண்டு மணி நேரத்தில் 20அடி ஆழத்திற்கு குழி தோண்டப்பட்டது. தற்போது ஐந்து மணி நேரம் ஆனநிலையில் 38அடி தோண்டப்பட்டுள்ளது. இந்நிலையில், குழந்தை குழியில் சிக்கி தற்போது 42மணி நேரத்தை கடந்து விட்டது.

ரிங் இயந்திரம் மூலம் தோண்டப்படும் குழி இவ்வளவு தாமதாமாக துழையிட காரணம், 17அடி குழி எட்டியதும் சிறிய பாறைகள் இருந்ததால் அதிர்வுகளை தவிர்க்க மொதுவாக துறையிட்டு குழி தோண்டப்பட்டுவருகின்றது. குழந்தை இன்னும், கீழே இறங்காமல் இருக்க கையை பிடிக்கும் வகையில் கருவி அமைக்கப்பட்டுள்ளது.