55 வயதிலும் குறையாத அழகு…. நடிகை நதியாவின் இளமை சீக்ரெட் இதுதான்…. நீங்களே பாருங்க….!!!

தமிழ் சினிமாவில் 30 வருடங்களுக்கு முன் அறிமுகமானவர் நடிகை நதியா. பூவே பூச்சூடவா என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இவருக்கு ஆண் ரசிகர்கள் மட்டுமல்லாமல் பெண் ரசிகர்களும் உள்ளனர். ஒரு காலகட்டத்தில் நதியா கொண்டை, நதியா வளையல் மற்றும் நதியா கம்மல் என அவர் பெயரில் வியாபாரமும் செழிப்பாக இருந்தது. பொதுவாக நடிகைகள் சிலர் இரண்டாவது திரைப்படத்தில் கவர்ச்சியில் குதிப்பார்கள்.

ஆனால் தனது இறுதி படம் வரை கவர்ச்சி காட்டாமல் கண்ணியமாக நடித்து ரசிகர்களை கவர்ந்த நடிகை என்றால் அது நதியா மட்டும் தான். இவருக்கு தற்போது 55 வயதாகிறது. ஆனாலும் தனது இளமை குறையாமல் இன்னும் அப்போது இருந்தது போல இளமையாகவே இருக்கிறார். இந்நிலையில் எப்போதும் இளமையாக நதியாய் இருப்பதற்கான சீக்ரெட் என்னவென்றால், அவர் தினமும் உடற்பயிற்சி செய்வது, யோகா செய்வது மகிழ்ச்சியாக இருப்பது தான் என அவரே பல பேட்டிகளில் கூறியுள்ளார்.

அவர் வழக்கமாக உடற்பயிற்சி செய்வது உடல், மனம் மற்றும் ஆன்மாவிற்கு தரும் கௌரவம் எனவும் கூறியுள்ளார். இவர் உடற்பயிற்சி மற்றும் யோகா செய்யும் வீடியோக்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வருகின்றன. மேலும் நதியா இளமையாக இருக்க சைவ உணவுகளையே சாப்பிட்டு வருகிறார். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை அவர் அதிகம் எடுத்துக் கொள்வதால் தனது இளமை மாறாமல் இன்னும் அப்படியே உள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Nadiya Moidu (@simply.nadiya)