நடிகர் ஜெயப்பிரகாஷ் மகன்கள் யார் தெரியுமா?…. இணையத்தில் வைரலாகும் புகைப்படம் இதோ….!!!!

தமிழில் ஜி.ஜே சினிமா என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வந்த ஜெயப்பிரகாஷ் செல்லமே, ஏப்ரல் மாதத்தில் மற்றும் தவசி போன்ற படங்களை தயாரித்துள்ளார்.அதன் பிறகு கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான மாயக் கண்ணாடி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக இவர் அறிமுகமானார். ஆனால் இவர் பிரபலம் அடைந்தது பசங்க என்ற திரைப்படத்தின் மூலம்.

அதில் ஆசிரியராக நடித்திருந்த இவரின் நடிப்பு பலரின் பாராட்டுகளையும் பெற்றது. அந்தப் படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான பிலிம் பேர் விருதையும் இவர் பெற்றுள்ளார். மேலும் நாடோடிகள், நான் மகான் அல்ல, தனி ஒருவன், மங்காத்தா, பூஜை மற்றும் லிங்கா உள்ளிட்ட பல்வேறு படங்களில் இவர் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகர் ஜெயப்பிரகாஷ் மகன்கள் குறித்த தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.

இவருக்கு நிரஞ்சன், துஷ்யந்த் ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவருமே ஐவராட்டம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளனர். அதன் பிறகு இவர்களுக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்புகள் எதுவும் பெரிதளவில் கிடைக்கவில்லை. இந்நிலையில் ஜெயப்பிரகாஷ் மகனின் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.