ஆந்திர மாநிலத்தில் பணத்திற்கு ஆசைப்பட்டு 7 ஆண்களை திருமணம் செய்வதும், பின்னர் அவர்களை விவாகரத்து செய்வதையும் வழக்கமாக கொண்டிருந்த பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் மதினிபுரம் கிராமத்தை சேர்ந்த ஆனந்த் ரெட்டி என்பவரின் மகள் மோனிகா. இவர் கடந்த மூன்று மாதங்களுக்கு, முன்பு ராமகிருஷ்ணா ரெட்டி என்பவரை திருமணம் செய்துகொண்டார். வரதட்சணை எதுவும் கொடுக்காத நிலையிலும், மோனிகா அழகாக இருந்ததால் ராமகிருஷ்ணா அவரை திருமணம் செய்துகொண்டார்.
இந்த நிலையில் கடந்த ஆகஸ்டு 25ம் தேதி வீட்டில் இருந்த நகைகள் மற்றும் பணத்தை எடுத்து கொண்டு, சொந்த ஊருக்கு சென்றுவிட்டு வருவதாக கூறி மோனிகா கிளம்பியுள்ளார். ஆனால் நீண்ட நாட்கள் ஆகியும் மனைவி வீடு திரும்பவில்லை. அவருடைய சொந்த ஊருக்கு சென்று பார்த்த போது அங்கும் அவர்கள் இல்லை. இதனால் சந்தேகமடைந்த ராமகிருஷ்ணா பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதனையடுத்து வழக்கு பதிவு செய்த பொலிஸார் செல்போன் சிக்னலை வைத்து விஜயவாடாவில் மோனிகாவையும் அவருடன் ஒரு இளைஞர் இருப்பதையும் கண்டறிந்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது மோனிகா ஏற்கனவே 7 பணக்காரர்களை திருமணம் செய்துகொண்டு அவர்களை விவாகரத்து செய்திருப்பது தெரியவந்தது. இதனால் சந்தேகம் வழுத்ததையடுத்து மோனிகாவை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டதில்.
பணம் மற்றும் நகைக்காக அவர் இப்படி திருமணம் செய்துகொண்டு ஏமாற்றி வருவது தெரியவந்தது. மேலும் இதற்கு உடந்தையாக அவருடைய தந்தை மற்றும் இளைஞர் இருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து மூவரையும் கைது செய்து பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.